Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sasikumar : அதிரடி ஆக்ஷ்னில் இறங்கிய சசிகுமார்.. ‘ப்ரீடம்’ படத்தின் டீசரில் இதைக் கவனித்தீர்களா?

Sasikumar Freedom Movie Teaser : கோலிவுட் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி , தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சசிகுமார். இவரின் நடிப்பில் இறுதியாக டூரிஸ்ட் பேமிலி படம் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில், அதை தொடர்ந்து உருவாகியுள்ள, ஃப்ரீடம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Sasikumar : அதிரடி ஆக்ஷ்னில் இறங்கிய சசிகுமார்.. ‘ப்ரீடம்’ படத்தின் டீசரில் இதைக் கவனித்தீர்களா?
ஃப்ரீடம் திரைப்பட டீசர்
Barath Murugan
Barath Murugan | Updated On: 02 Jun 2025 18:04 PM

நடிகர் சசிகுமார் (Sasikumar) தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக அறிமுகமாகி, பின் இயக்குநராகப் படங்களை இயக்கி அதைத் தொடர்ந்து நடிகராகவும் கலக்கி வருகிறார். பிரபல இயக்குநர்களி்ன் படங்களில் நடித்து வெற்றிப் படங்களைக் கொடுக்கும் நடிகர்கள் மத்தியில், அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புக்கொடுக்கும் விதத்தில், படங்களில் நடித்த வருபவர் சசிகுமார். இவர் இயக்குநராகப் படங்களை இயக்கியிருந்தாலும், நடிகராக பல ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி சுமார் ரூ. 75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த படம்தான் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family). இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth) இயக்கியிருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடித்துவந்த படம்தான் ஃப்ரீடம் (Freedom). இந்த திரைப்படத்தை இயக்குநர் சத்யசிவா (Sathyasiva) இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் சசிகுமார் அதிரடி ஆக்ஷ்ன் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இவர் சிகப்பு மஞ்சள் பச்சை மற்றும் ஜெய் பீம் போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த ஃப்ரீடம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசரில் நடிகர் சசிகுமார் அதிரடி கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

நடிகர் கார்த்தியின் எக்ஸ் தள பதிவு  :

 

ஃப்ரீடம் படத்தின் டீசர் எப்படி இருக்கு :

இந்த படத்தில் நடிகர் சசிகுமார் ஆக்ஷ்ன் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதையும் இலங்கையில் வைத்து எடுத்த கதையைப் போல உள்ளது. இந்த படத்தில் விடுதலைக்காகப் போராடும் போராளியாக நடிகர் சசிகுமார் நடித்திருக்கிறார் என்பது டீசர் மூலம் தெரிகிறது. மேலும் சசிகுமாரின் மனைவி கதாபாத்திரத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இந்த படத்திலும் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார்.

சசிகுமாரின் ஃப்ரீடம் படமானது வரும் 2025, ஜூலை 10ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படமானது டூரிஸ்ட் பேமிலி படத்தைப் போல சசிகுமாருக்கு வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃப்ரீடம் படத்தை விஜய கணபதி பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் பாண்டிய பரசுராமன் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீசிற்கு இன்னும் 1 மாதம் மட்டும் உள்ள நிலையில், படக்குழு டீசரை வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் டீசரை தொடர்ந்து இன்னும் சில நாட்களில் இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.