Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வக்கு இல்லாம இருந்துருக்கேன் – ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த தனுஷ்

Actor Dhanush: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் குபேரா. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் தனுஷ் தனது ரசிகர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அறிவுறை கூறியுள்ளார்.

ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வக்கு இல்லாம இருந்துருக்கேன் – ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த தனுஷ்
தனுஷ்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jun 2025 12:12 PM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கும் படம் குபேரா. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி உள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் உருவான இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று 01-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்றது. இதில் நடிகர்கள் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர்.

பொதுவாக இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடிகைகள் கலந்துகொண்டு படம் குறித்தும் படத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்தும் வெளிப்படையாக பேசுவது வழக்கம். ஆனால் நடிகர் தனுஷ் படத்தின் இசை வெளியீட்டு விழா என்றால் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். காரணம் அவர் தன்னை சுற்றி ஏற்படும் வதந்திகள் கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக அங்கு பேசுவார்.

இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த தனுஷ்:

இந்த நிலையில் நடிகர் தனுஷ் குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதற்கு சில அறிவுறைகளை கூறியுள்ளார். அதில், நான் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கூட வக்கு இல்லாம கூட இருந்து இருக்கேன். அப்பவும் மகிழ்ச்சியா தான் இருக்கேன். இப்போ எல்லாம் என்கிட்ட இருக்கு இப்பவும் மகிழ்ச்சியா இருக்கேன்.

மகிழ்ச்சி அப்படின்றது நமக்குள்ளதான் இருக்கு. அத நாமாதான் தேர்ந்தெடுக்கனும். ஏன்னா நான் சந்தோஷத்த எப்பவும் வெளிய தேடுனதே இல்லை. சந்தோஷம் மற்றும் நிம்மதி தவிற வாழ்க்கையில எதுவும் முக்கியம் இல்ல என்றும் அத கண்டுபிடிச்சு நாமா மகிழ்ச்சியா இருக்க பழகிட்டோம்னா போதும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வைரலாகும் தனுஷ் வீடியோ:

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை:

குபேரா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் தனுஷ் தானே இயக்கி நடிக்கும் படம் இட்லி கடை. இந்தப் படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகை நித்யா மேனன் நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் அருண் விஜய் மற்றும் ராஜ்கிரணும் நடித்து உள்ளனர். படம் அக்டோபர் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.