Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thug Life Controversy : ‘கமல் சார் சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும்’ – கன்னட சர்ச்சையில் கிஷோர் ஆதரவு

Kishore Supports Kamal Haasan : தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிரங்குகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் கிஷோர் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

Thug Life Controversy : ‘கமல் சார் சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும்’ – கன்னட சர்ச்சையில் கிஷோர் ஆதரவு
கமல்ஹாசன் - கிஷோர்
karthikeyan-s
Karthikeyan S | Published: 02 Jun 2025 23:10 PM

நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. கன்னடம் குறித்து பேசியதற்கு நடிகர் கமல்ஹாசன் 24 மணி நேரங்களில் மன்னிப்புக் கேட்க வேண்டும் இல்லையென்றால் படத்துக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை எச்சரித்திருக்கிறது. இந்த நிலையில் இதனை எதிர்த்து நடிகர் கமல்ஹாசன் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த விவகாரம் அரசியல் விவகாரமாக மாறியிருக்கிறது. இரு மாநில அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல கன்னட நடிகரும் தமிழில் பொல்லாதவன், ஆடுகளம், ஹரி தாஸ், வேட்டையன் போன்ற படங்களில் நடித்தவருமான கிஷோர் கருத்து தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கிஷோர், கமல்ஹாசன் மிகச்சிறந்த கலைஞர். அவர் சொல்கிறார் என்றால் அதில் அர்த்தம் இருக்கும். என்றார்.

கமலுக்கு நடிகர் கிஷோர் ஆதரவு

செய்தியாளர்களை சந்தித்த கிஷோர் தக் லைஃப் சர்ச்சை குறித்து தனது கருத்தை முன் வைத்தார். அவர் பேசியதாவது, கமல்ஹாசன் மிகச்சிறந்த கலைஞர். அவர் சொல்கிறார் என்றால் அதில் அர்த்தம் இருக்கும். நாம் கேள்வி எழுப்பலாம் அல்லது விளக்கம் கேட்கலாம். அது நமது உரிமை. அது நம்முடன் இருக்கட்டும். இதனை உணர்வுப்பூர்வமாக அணுக கூடாது என நான் கருதுகிறேன். எல்லா மொழிகளும் எங்கிருந்தோ பிறந்திருக்கும். இதனால் ஒரு மொழி பெரியது மற்ற மொழி சிறியது இல்லை. தமிழ் மாதிரி கன்னடமும் எங்கிருந்தோ பிறந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஒரு மொழி உருவானது என்பது அவமானமாகாது. இதனை உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக அணுக வேண்டும். இனம், மதம் மொழிகளை வைத்து அரசியல் செய்யும் அரசியல் வாதிகள் போல இதனை பார்க்க கூடாது என்றார்.

துபாயில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்வில் படக்குழுவினர்

 

சர்ச்சைக்கு சிவ ராஜ்குமார் விளக்கம்

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சிவராஜ்குமார், ”கன்னடத்திற்கு தான் நான் முன்னுரிமை அளிப்பேன். அதில் சந்தேகம் வேண்டாம். வரலாறை திருப்பி பார்க்கலாம். நான் எப்பொழுதும் கன்னடத்திற்கு ஆதரவாக நின்றிருக்கிறேன். கன்னடம் என் தாய் மொழி. அதற்காக உயிரையும் கொடுப்பேன். அந்த நிகழ்வில் நான் அங்கிருந்தேன்.எனக்கு எல்லா மொழிகளும் முக்கியம். ஆனால் கன்னடத்திற்கு தான் முன்னுரிமை அளிப்பேன்” என்றார்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நாயகன் படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்கு பிறகு  இயக்குநர் மணிரத்னம் – வெற்றிமாறன் காம்போவில் வெளியாகும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் கமலுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிகர் சிலம்பரசன் டிஆர் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

வாழ்க்கையில் வெற்றி கிடைக்க வேண்டுமா? - இந்த 2 விஷயம் செய்யாதீங்க
வாழ்க்கையில் வெற்றி கிடைக்க வேண்டுமா? - இந்த 2 விஷயம் செய்யாதீங்க...
அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான Infinix-ன் கேமிங் ஸ்மார்ட்போன்!
அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான Infinix-ன் கேமிங் ஸ்மார்ட்போன்!...
மிடில் கிளாஸ் பையன் பிம்பத்திலிருந்து விடுபட வேண்டும்...
மிடில் கிளாஸ் பையன் பிம்பத்திலிருந்து விடுபட வேண்டும்......
வாழ்க்கையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கிருஷ்ணர் கோயில்கள்!
வாழ்க்கையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கிருஷ்ணர் கோயில்கள்!...
பள்ளிகளில் முகக் கவசம் கட்டாயமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
பள்ளிகளில் முகக் கவசம் கட்டாயமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்...
ஆர்சிபி வீரர்கள் வெற்றி ஊர்வலம்- கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்
ஆர்சிபி வீரர்கள் வெற்றி ஊர்வலம்- கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்...
3 முறை பாகிஸ்தானுக்கு பயணம்.. உளவு பார்த்த பிரபல யூடியூபர் கைது
3 முறை பாகிஸ்தானுக்கு பயணம்.. உளவு பார்த்த பிரபல யூடியூபர் கைது...
ஆதார் கார்டு விவரங்கள் பிழையாக இருப்பதில் இவ்வளவு சிக்கல்களா?
ஆதார் கார்டு விவரங்கள் பிழையாக இருப்பதில் இவ்வளவு சிக்கல்களா?...
இந்தியாவின் தலைசிறந்த நடிகர் மோகன்லால் - செல்வராகவன்
இந்தியாவின் தலைசிறந்த நடிகர் மோகன்லால் - செல்வராகவன்...
புனர்பூசம் நட்சத்திரமா நீங்கள்?.. இந்த கோயில் சென்றால் சிறப்பு!
புனர்பூசம் நட்சத்திரமா நீங்கள்?.. இந்த கோயில் சென்றால் சிறப்பு!...
ஆடு, கோழிகளை திருட முயன்ற 2 பேர்.. அடித்தே கொன்ற மக்கள்
ஆடு, கோழிகளை திருட முயன்ற 2 பேர்.. அடித்தே கொன்ற மக்கள்...