AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

 சர்ச்சையில் சிக்கிய கமலின் தக் லைஃப்: கர்நாடகா திரையரங்குகள் புறக்கணிப்பு? வசூல் பாதிக்குமா?

Thug Life in Trouble : நடிகர் கமல் மன்னிப்பு கேட்காத நிலையில் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. திரையரங்குகள் தக் லைஃப் படத்தை வெளியிடுவதில் இருந்து பின் வாங்கியுள்ளன. இது படத்தின் வசூல் பாதிக்குமா என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

 சர்ச்சையில் சிக்கிய கமலின் தக் லைஃப்: கர்நாடகா திரையரங்குகள் புறக்கணிப்பு? வசூல் பாதிக்குமா?
கமல்ஹாசன் - சிலம்பரசன் டிஆர்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 Jun 2025 19:43 PM IST

மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் கமல்ஹாசன் (Kamal Haasan) நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படமான தக் லைஃப் ( Thug Life) தற்போது கர்நாடகாவில் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. ”கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்று தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் கமல் பேசியது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. “தமிழை உயர்த்த கன்னடத்தை இழிவுபடுத்துகிறார்” எனக் கூறி, கர்நாடக ரட்சணா வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் மிகுந்த கண்டனம் தெரிவித்துள்ளன. பெங்களூருவில் உள்ள விக்டரி சினிமாஸ் திரையரங்கத்தை சூழ்ந்து போராட்டம் நடந்தது. இந்தப் படத்தை திரையிடவே கூடாது என போராட்டக்காரர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து, பல திரையரங்குகள் தக் லைஃப் படத்திற்கு ஸ்லாட் இல்லை என மறுப்பு தெரிவித்து வருகின்றன.

கர்நாடகாவில் தக் லைஃப் வெளியிட தடை?

கர்நாடகா ஃபிலிம் சாம்பரின் தலைவர் எம். நரசிம்மலு இதுதொடர்பாக பேசியதாவது, “கன்னட மொழியை அவமதிக்கும் கருத்தை கமல் திரும்பப்பெற்று மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக் லைஃப் படம் கர்நாடகாவில் திரையிடப்படும். இல்லையெனில் அந்தப் படம் இங்கு வெளியிடப்படாது என்று அவர் தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர்

பாக்ஸ்ஆபிஸில் பாதிப்பு

ஒன் இந்தியாவில்  வெளியான கட்டுரையின் படி கர்நாடகாவில் படம் வெளியாகாமல் இருந்தால், தயாரிப்பாளர்களுக்கு ரூ.5-10 கோடி வரை இழப்பை ஏற்படுத்தும் எனவும், இது பெரிய இழப்பு இல்லை என்றாலும் படத்தின் வரவேற்பை பொறுத்தே முடிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இத்தகைய சர்ச்சைகளால் ஓடிடி வெளியாகும்போது நல்ல வரவேற்பு கிடைக்க காரணமாக அமையலாம் என்று கூறப்படுகிறது.  கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் 38 ஆண்டுகளுக்கு பின் இணைந்து பணியாற்றியிருக்கும் படம் என்பதால், ஓடிடியில் பெரிய விலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

கமலின் உறுதியான நிலைப்பாடு

நடிகர் கமல் மன்னிப்பு கேட்பதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. இந்தப் படத்துக்கு அவரே தயாரிப்பாளர் என்பதால் அவர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கலாம். ஒருவேளை படத்துக்கு வேறு தயாரிப்பாளராக இருந்தால், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வரும் அழுத்தத்தால் அவர் தன் முடிவை மாற்றிக்கொள்ளலாம்.  பொதுவாக படங்கள் மீது எழும் சர்ச்சைகள் அந்த படங்களுக்கு விளம்பரங்களாகவே அமைந்திருக்கின்றன. அந்த வகையில் தக் லைஃப் படத்தின் மீது எழுந்திருக்கும் விமர்சனங்கள் படத்துக்கு விளம்பரமாக  அமையும் என்று கூறப்படுகிறது. படத்துக்கு ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து இது மாறலாம்.

Follow Us