தக் லைஃப் படத்தில் இருந்து விண்வெளி நாயகா பாடலை வெளியிட்ட படக்குழு!
Vinveli Nayaga Lyrical Video | நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்தப் படத்தில் இருந்து பாடல்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து விண்வெளி நாயகா பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்தும் தனது இடத்தை யாருக்கும் கொடுக்காமல் இருப்பவர் கமல் ஹாசன். உலக சினிமா ரசிகர்களால் உலக நாயகன் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் கமல் ஹாசன். இவர் நாயகனாக நடித்து இருதியாக வெளியான படம் இந்தியன் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றிப் பெற்றதால் இரண்டாம் பாகத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்தப் படத்தை முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் சங்கர் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. படம் படுதோல்வியை சந்தித்தது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் இந்தியன் 2 படத்திற்கு முன்னதாக நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்து வெளியான படம் விக்ரம்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை கமல் ரசிகர்கள் கொண்டடித் தீர்த்தனர். லோகேஷ் தனது ஃபேரவரட் நாயகனுக்காத இந்தப் படத்தின் கதையை சிறப்பாக எழுதியிருந்தார் அல்ல அல்ல செதுக்கி இருந்தார் என்றே பலரும் கருத்து தெரிவித்தனர்.




இதன் காரணமாகவே நடிகர் கமல் ஹாசனின் இந்தியன் 2 படம் தோல்வி அடைந்ததை அவரது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பின்பு கல்கி 2898 ஏடி படத்தில் நாயகனாக இல்லாமல் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் கமல் ஹாசன். கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
விண்வெளி நாயகா பாடல் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள பதிவு:
#VinveliNayaga Out Now
➡ https://t.co/BWOW6IgPZE#VisvadaNaayakaa #VeereKainaat #Thuglife Bookings open now#ThuglifeFromJune5 in Cinemas near you#KamalHaasan #SilambarasanTR
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath… pic.twitter.com/ksTdeEpFbf— Raaj Kamal Films International (@RKFI) June 1, 2025
தக் லைஃப் படத்தின் வெற்றியை எதிர்நோக்கும் கமல் ரசிகர்கள்:
இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்ததால் தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்துள்ள தக் லைஃப் படத்தை அவரது ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற்னர்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களின் லிரிக்கள் வீடியோ ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று ஜூன் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு படத்தில் இருந்து விண்வெளி நாயகா படத்தின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.