Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kamal Haasan : என்னுடன் படம் பேசியது.. தக் லைஃப் படம் பார்த்து நடிகர் கமல்ஹாசன் கொடுத்த ரிவியூ!

Kamal Haasans Thug Life Movie Review : தமிழ் சினிமாவில் பிரபலம் மிக்க இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் மணிரத்னம். இவரின் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்புவின் முன்னணி நடிப்பில் வெளியாகியுள்ள படம்தான் தக் லைஃப். இந்த படத்தைப் பார்த்து நடிகர் கமல்ஹாசன் கொடுத்த விமர்சனம் குறித்துப் பார்க்கலாம்.

Kamal Haasan : என்னுடன் படம் பேசியது.. தக் லைஃப் படம் பார்த்து நடிகர் கமல்ஹாசன் கொடுத்த ரிவியூ!
தக் லைஃப் படம் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 01 Jun 2025 15:03 PM

இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தக் லைஃப் (Thug Life) . இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் முன்னணி நடிகர்களாகக் கமல்ஹாசன் (Kamal Haasan)மற்றும் சிலம்பரசன் (Silamabarasan) இணைந்து நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணியில் உருவாகும் முதல் படமாக இந்த தக் லைஃப் அமைந்துள்ளது. இந்த படத்தின் கதையை நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னமும் இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். இந்த படத்தில் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan), அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி , அசோக் செல்வன் மற்றும் ஜோஜு ஜார்ஜ் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியாக்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், இந்த தக் லைஃப் படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் ரிவ்யூ கொடுத்துள்ளார். அவர் இந்த படத்தை சினிமாவின் காதலனாகப் பார்த்ததாகவும், தக் லைப் படம் தன்னுடன் பேசியதாகவும் கூறியுள்ளார். இது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

தக் லைஃப் படம் பற்றி நடிகர் கமல்ஹாசன் கொடுத்த ரிவ்யூ :

சமீபத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், தக் லைஃப் படத்தை பார்த்ததாக பேசியுள்ளார். அதில் நடிகர் கமல் “தக் லைஃப் படத்தைப் பார்த்தேன், அதில் அனைவரும் நன்றாக வேலை செய்திருக்கிறார்கள். உங்களின் பிரதிநிதியாகப் படத்தை முதலில் பார்த்துவிட்டேன். நான் முதலில் சினிமா ரசிகன், அதன் பிறகுதான் நடிகன். உங்களுக்கு வைக்கப்போகும் விருந்தில் நான் கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்துவிட்டேன்.

நான் ஒரு சினிமா ரசிகனாகக் கூறுகிறேன், எனக்கு மணிரத்னம் மற்றும் கமல்ஹாசனை தெரியாது என்று வைத்துக்கொள்ளுங்கள். தக் லைஃப் படம் பேசியது என்னுடன், அந்த உரையாடலின் நெகிழ்ச்சியில்தான் உங்கள் முன் நான் இவ்வாறு பேசிகொண்டியிருக்கிறேன். என்னதான் சில தடங்கல்கள் வந்தாலும் உங்களின் அன்பு என்னைக் காப்பாற்றிவிடுகிறது” என்று நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் பேசிய வீடியோ :

தக் லைஃப் படத்தின் டிக்கெட் புக்கிங் :

கமல் மற்றும் சிம்புவின் தக் லைஃப் படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங், 2025, ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. தமிழகம் மட்டுமில்லாமல், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தக் லைஃப்' படத்தில் சிலம்பரசன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
'தக் லைஃப்' படத்தில் சிலம்பரசன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?...
'கமல் சார் சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும்' - கிஷோர் ஆதரவு
'கமல் சார் சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும்' - கிஷோர் ஆதரவு...
தனுஷின் குபேரா படத்திலிருந்து வெளியான இரண்டாவது சிங்கிள்!
தனுஷின் குபேரா படத்திலிருந்து வெளியான இரண்டாவது சிங்கிள்!...
கொரோனாவை கண்டறியும் புதிய கருவி - அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை
கொரோனாவை கண்டறியும் புதிய கருவி - அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை...
ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2ம் இடம்.. இந்திய வீரர்களை வாழ்த்திய மோடி!
ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2ம் இடம்.. இந்திய வீரர்களை வாழ்த்திய மோடி!...
மணிரத்னம் இயக்கத்தில் மிஸ் செய்யக்கூடாத படங்களின் லிஸ்ட் இதோ
மணிரத்னம் இயக்கத்தில் மிஸ் செய்யக்கூடாத படங்களின் லிஸ்ட் இதோ...
சென்சார் சான்றிதழ் வழங்க மறுப்பு தொடர்பாக வெற்றிமாறன் வழக்கு!
சென்சார் சான்றிதழ் வழங்க மறுப்பு தொடர்பாக வெற்றிமாறன் வழக்கு!...
தக் லைஃப் பட சர்ச்சையில் கர்நாடகா துணை முதல்வர் கருத்து!
தக் லைஃப் பட சர்ச்சையில் கர்நாடகா துணை முதல்வர் கருத்து!...
இந்த மூன்று நடிகர்களில் யார் படத்திற்கு நீங்க வெயிட்டிங்...
இந்த மூன்று நடிகர்களில் யார் படத்திற்கு நீங்க வெயிட்டிங்......
முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! அதிர்ச்சியில் மாணவர்கள்..!
முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! அதிர்ச்சியில் மாணவர்கள்..!...
மகன் பவனின் முதல் பிறந்தநாள்.. புகைப்படத்தைப் பகிர்ந்த SK!
மகன் பவனின் முதல் பிறந்தநாள்.. புகைப்படத்தைப் பகிர்ந்த SK!...