Silambarasan : ‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது!
Silambarasans Making Video From Thug Life Movie : தனது சிறு வயதில் இருந்தே சினிமாவின் மீது ஆர்வம் கட்டிவருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் திரைப்படம்தான் தக் லைஃப். இந்த படத்த்தில் தனது கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை , சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிலம்பரசன் (Silambarasan) . இவரின் நடிப்பில் இறுதியாக பத்து தல (Pathu Thala) என்ற படம் வெளியானது. கடந்த 2023ம் ஆண்டு வெளியான இந்த படத்தைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தக் லைஃப் (Thug Life). இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் கமல் ஹாசனும் (Kamal Haasan) முன்னணி நாயகனாக நடித்துள்ளார். இதில் கமல்ஹாசனின் கதாபாத்திரத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதைப்போல நடிகர் சிலம்பரசனின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் கதையைக் கமல்ஹாசன் எழுதியுள்ளார். இவரின் கதையில் மிகவும் பிரம்மாண்டமாகவே இந்த தக் லைஃப் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2025, ஜூன் 5ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சிலம்பரசனின் மேக்கிங் வீடியோவை (Making video), அவரே தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.




நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
See you all in Theaters!#ThugLifeFromJune5 pic.twitter.com/jlTTnAKXE6
— Silambarasan TR (@SilambarasanTR_) June 1, 2025
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் என இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படமானது கிட்டத்தட்ட சுமார் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இந்த தக் லைஃப் படத்தில் சுமார் 9 பாடல்கள் உருவாகியுள்ளது. மேலும் இணையத்தில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் “முத்த மழை” என்ற பாடல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன், திரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, அசோக் செல்வன் மற்றும் பலர் உட்பட முன்னணி பிரபலங்களின் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது. படத்தின் டிக்கெட் புக்கிங் 2025, ஜூன் 1ம் தேதி முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்த படமானது தமிழ் , தெலுங்கு, மலையாளம் , இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.