Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மீண்டும் மீண்டுமா… நடிகர் அஜித் குமாரின் 64-வது படத்தை இயக்கப்போவது யார்?

Actor Ajith Kumar: நடிகர் அஜித் குமார் நடிப்பு கார் ரேஸ் என்று இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து அஜித் குமார் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் அவரது 64-வது படத்தை யார் இயக்க உள்ளார் என்பது குறித்த தகவல் வைரலாகி வருகின்றது.

மீண்டும் மீண்டுமா… நடிகர் அஜித் குமாரின் 64-வது படத்தை இயக்கப்போவது யார்?
அஜித் குமார்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 11 Jun 2025 11:32 AM

நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar) நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இரண்டு படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் அவரது 64-வது படத்தை இயக்க உள்ள இயக்குநர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி அஜித் குமாரின் நடிப்பில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி படத்தை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த அஜித் குமாரின் 64-வது படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியான விடாமுயற்சி படம்:

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டே அஜித் குமாரின் 63-வது படமான விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது. ஆனால் பல பிரச்னைகள் காரணமாக படப்பிடிப்பு முடிவடைந்து படம் திரையரங்குகளில் வெளியாக இரண்டு வருடங்கள் ஆகியது. அதன்படி படம் பிப்ரவரி மாதம் 6-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன், ரெஜினா கேசண்ட்ரா, ஆரவ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் எக்ஸ் தள பதிவு:

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி:

இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு, பிரியா பிரகாஷ் வாரியர், சிம்ரன், ரெடின் கிங்ஸ்லி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருந்த நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். மேலும் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகம்.. பிசிசிஐ கட்டுப்பாடு!
கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகம்.. பிசிசிஐ கட்டுப்பாடு!...
டிராகன் படத்தில் சிம்பு கூட நடித்திருக்கலாம் - அஸ்வத் மாரிமுத்து
டிராகன் படத்தில் சிம்பு கூட நடித்திருக்கலாம் - அஸ்வத் மாரிமுத்து...
ஏர் இந்தியா விமானத்தில் ஏற்கனவே கோளாறு இருந்ததா?
ஏர் இந்தியா விமானத்தில் ஏற்கனவே கோளாறு இருந்ததா?...
நீர்வீழ்ச்சியில் மது அருந்திய இளைஞர்கள் - ஷாக்கிங் வீடியோ!
நீர்வீழ்ச்சியில் மது அருந்திய இளைஞர்கள் - ஷாக்கிங் வீடியோ!...
ரவி மோகனின் ப்ரோ கோட் படத்தில் இத்தனை ஹீரோயின்களா?
ரவி மோகனின் ப்ரோ கோட் படத்தில் இத்தனை ஹீரோயின்களா?...
தரையில் விழுந்து நொருங்கிய விமானம்.. தலைவர்கள் இரங்கல்
தரையில் விழுந்து நொருங்கிய விமானம்.. தலைவர்கள் இரங்கல்...
நியூயார்க்கில் ஒரு குட்டி இந்தியா - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
நியூயார்க்கில் ஒரு குட்டி இந்தியா - இணையத்தில் வைரலாகும் வீடியோ!...
விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு - அகமதாபாத் காவல்துறை
விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு - அகமதாபாத் காவல்துறை...
'சூர்யா 45 பட டீசர்' குறித்துச் சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட்!
'சூர்யா 45 பட டீசர்' குறித்துச் சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட்!...
மேத்யூ தாமஸின் நைட் ரைடர்ஸ் படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் இதோ
மேத்யூ தாமஸின் நைட் ரைடர்ஸ் படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் இதோ...
169 இந்தியர்கள்.. ஏர் இந்திய விமானத்தில் பயணித்த பயணிகள் லிஸ்ட்!
169 இந்தியர்கள்.. ஏர் இந்திய விமானத்தில் பயணித்த பயணிகள் லிஸ்ட்!...