Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தக் லைஃப் படத்திற்கு நெட்டிசன்களின் நெகட்டிவ் விமர்சனம்… வைரலாகும் நடிகை த்ரிஷாவின் போஸ்ட்

Actress Trisha Krishnan X Post: சமீபத்தில் தக் லைஃப் படத்தில் நடித்த நடிகை த்ரிஷா கிருஷ்ணன், ரசிகர்கள் இந்த படத்தில் தனது கதாபாத்திரத்தை விமர்சித்ததை அடுத்து ஒரு பதிவு ஒன்றை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

தக் லைஃப் படத்திற்கு நெட்டிசன்களின் நெகட்டிவ் விமர்சனம்… வைரலாகும் நடிகை த்ரிஷாவின் போஸ்ட்
நடிகை த்ரிஷாImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Jun 2025 19:43 PM

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்து கடந்த 5-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசனும் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் (Actress Trisha Krishnan) முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியான பிறகு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்ற நிலையில் சிலர் எதிர்மறையான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அதில் குறிப்பாக நடிகை த்ரிஷாவின் கதாப்பாத்திரத்தை நெட்டிசன்கள் அதிகம் ட்ரோல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தக் லைஃப் படத்தில் நடிகை த்ரிஷா சுகர் பேபியாக நடித்துள்ளார். சுகர் பேபி என்பது இளம் பெண் ஒருவர் தனது அப்பா அல்லது அதற்கு மேல் வயதுடைய நபர்களுடன் காதலில் இருப்பதை குறிப்பதாகும். இதற்கு நெட்டிசன்கள் பல எதிர்மறையான கருத்தை தெரிவித்து வந்த நிலையில் நடிகை த்ரிஷா அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை த்ரிஷா கிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

அந்தப் பதிவில் நீங்கள் அன்பாக இருக்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் தெளிவற்றவராக இருங்கள் என்று தெரிவித்துள்ளார். இந்தப் படதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே நடிகை த்ரிஷாவின் காட்சி வைரலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் தக் லைஃப் படத்தில் நடிகர்கள் அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, சான்யா மல்கோத்ரா, ஜோஜூ ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன், வையாபுரி, வடிவுகரசி என பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஸ்னல் நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இந்தப் படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்திற்கு சில நெகட்டிவான விமர்சனங்கள் தொடர்ந்து வந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக படம் சிறப்பாக உள்ளது என்றும் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.

எலும்புகள் பலவீனமடைவதற்கு என்ன காரணம்? எப்படி தவிர்ப்பது?
எலும்புகள் பலவீனமடைவதற்கு என்ன காரணம்? எப்படி தவிர்ப்பது?...
ஆர்சிபி அணியை வாங்குகிறாரா கர்நாடகா துணை முதல்வர்..?
ஆர்சிபி அணியை வாங்குகிறாரா கர்நாடகா துணை முதல்வர்..?...
மழை காலங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பது எப்படி?
மழை காலங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பது எப்படி?...
லார்ட்ஸில் அதிக ரன்கள்..! 99 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஸ்மித்!
லார்ட்ஸில் அதிக ரன்கள்..! 99 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஸ்மித்!...
முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன? தவிர்ப்பது எப்படி?
முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன? தவிர்ப்பது எப்படி?...
வாக்கிங் போக சிறந்த நேரம் எது? காலையா? மாலையா?
வாக்கிங் போக சிறந்த நேரம் எது? காலையா? மாலையா?...
குபேரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு...
குபேரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு......
போன் மூலம் டிஜிபின் எண்ணை எப்படி தெரிந்துகொள்வது?
போன் மூலம் டிஜிபின் எண்ணை எப்படி தெரிந்துகொள்வது?...
ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா...
ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா......
ஓசி பயணம்..! மக்களிடையே வார்த்தையை விட்ட திமுக எம்.எல்.ஏ..!
ஓசி பயணம்..! மக்களிடையே வார்த்தையை விட்ட திமுக எம்.எல்.ஏ..!...
வித்ராதி ராஜயோகம்.. 6 ராசிக்கு கொட்டப்போகும் அதிர்ஷ்டம்!
வித்ராதி ராஜயோகம்.. 6 ராசிக்கு கொட்டப்போகும் அதிர்ஷ்டம்!...