Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

அந்தப் படத்தில் அசோக் செல்வனை ஹீரோவா நடிக்க வச்சதுக்கு இது தான் காரணம் – அஸ்வத் மாரிமுத்து சொன்ன ஃப்ளாஸ்பேக் சம்பவம்

Director Ashwath Marimuthu: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் முன்னதாக அளித்தப் பேட்டி ஒன்றில் தான் இயக்கிய முதல் படமான ஓ மை கடவுளே படத்தில் நடிகர் அசோக் செல்வனை நாயகனாக போட்டதற்கான காரணத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.

அந்தப் படத்தில் அசோக் செல்வனை ஹீரோவா நடிக்க வச்சதுக்கு இது தான் காரணம் – அஸ்வத் மாரிமுத்து சொன்ன ஃப்ளாஸ்பேக் சம்பவம்
அஸ்வத் மாரிமுத்துImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Jun 2025 15:32 PM

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் பட்டியலில் தற்போது இடம் பிடித்துள்ளார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Director Ashwath Marimuthu). இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆவதற்கு முன்பாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர்கள் போட்டியில் கலந்துகொண்டு பல நள்ள குறும்படங்களை கொடுத்து பிரபலம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2020-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் அசோக் செல்வன் மற்றும் நாயகியாக நடிகை ரித்திகா சிங் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வாணி போஜன், ஷா ரா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். மேலும் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் ஓ மை கடவுளே:

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஃபேண்டசி கதையை மையமாக வைத்து வெளியான படம் ஓ மை கடவுளே. அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் ஷா ரா ஆகியோர் நண்பர்களாக இருக்கிறார்கள். இதில் ரித்திகாவிற்கு அசோக் செல்வன் மீது காதல் இருக்கிறது. அவருக்கு திருமணம் பேச்சு வருகையில் அசோக் செல்வன் குறித்து வீட்டில் கூறி திருமணம் செய்துக்கொள்கிறார்.

ஆனால் அசோக் செல்வனுக்கு ரித்திகாவை தோழியாக மிகவும் பிடிக்கும். அவருக்கு ரித்திகா மீது காதல் எதுவுமில்லை. திருமணத்திற்கு பிறகு மாமனாரின் கம்பெனியில் வேலை செய்கிறார் அசோக் செல்வன். ஆனால் அசோக் செல்வனுக்கு நடிகராக வேண்டும் என்ற ஆசை அதிமகாம இருக்கிறது.

அப்போது அவரது ஸ்கூல் சீனியர் வாணி போஜனை பார்க்கிறார். அப்போது அசோக் செல்வனுக்கு அவர் மீது காதல் ஏற்படுகிறது. அவருடன் நெறுங்கி பழகுகிறார். அது ரித்திகாவிற்கு பிடிக்கவில்லை ஒரு கட்டத்தில் விவாகரத்திற்கு செல்கிறது. அப்போது கடவுளாக வரும் விஜய் சேதுபதி அசோக் செல்வனுக்கு ஒரு வரம் கொடுக்கிறார். அதனைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.

அஸ்வத் மாரிமுத்துவின் இன்ஸ்டா பதிவு:

அசோக் செல்வனை நாயகனாக்க என்ன காரணம்?

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அசோக் செல்வனை நாயகனாக ஆக்க ஒரு ப்ராமிஸ் தான் காரணம் என்று வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் தான் நாளைய இயக்குநர் போட்டியில் கலந்துகொண்டபோது ஒரு குறும்படத்தை அசோக் செல்வனை வைத்து இயக்க இருந்தேன். அந்த நேரத்தில் அசோக் செல்வனின் பாட்டி இறந்துவிட்டார்.

உடனே அவன் என்ன வேற யாரையாவது வைத்து அந்த குறும்படத்தை எடுக்க சொன்னான். நான் நீ வந்தா மட்டுமே இத எடுப்பேன்னு சொன்னேன். அவன் ஊருக்கு போயிட்டு அடுத்த நாள் நள்ளிரவு 1 மணிக்கு எனக்காக வந்து அந்தப் படத்த நடிச்சு கொடுத்தான். அப்போ தான் நான் முடிவு பண்ணேன். நான் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படத்தில் அசோக் செல்வனை நாயகனாக ஆக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் அதை செய்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

 

விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!...
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!...
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்...