Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ள பெஸ்ட் மலையாளப் படங்களின் லிஸ்ட் இதோ

Malayalam Movies: ஓடிடி என்ற கலாச்சாரம் வந்த பிறகு பிற மொழி படங்களை பார்ப்பது ரசிகர்களுக்கு மிகவும் சுலபமான காரியமாக மாறியது. அந்த வகையில் பல ஓடிடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ள சிறந்த மலையாளப் படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ள பெஸ்ட் மலையாளப் படங்களின் லிஸ்ட் இதோ
ஜியோ ஹாட்ஸ்டார்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Jun 2025 21:54 PM

பிரேமலு: இயக்குநர் கிரிஸ் ஏடி (Director Girish A.D) இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பிரேமலு. இந்தப் படத்தில் நடிகர் நஸ்லேன் நாயகனாகவும் நடிகை மமிதா பைஜூ நாயகியாகவும் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் சங்கீத் பிரதாப், அகிலா பார்கவன், ஷ்யாம் மோகன், அல்தாஃப் ஷமீம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். மேலும் நடிகர் மேத்யூ தாமஸ் இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இளைஞர்களின் காதலை மையமாக வைத்து வெளியான் இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் அதிக வரவேற்பைப் பெற்றது இந்தப் படம்.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நஸ்லேன் மற்றும் நடிகை மமிதா பைஜுவிற்கு படங்கள் வரிசைக்கட்டி காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடிகை மமிதா பைஜூ தற்போது விஜயின் ஜன நாயகன் படத்திலும் நடிகர் சூர்யாவின் 46-வது படத்திலும் நடித்து வருகிறார். இதில் சூர்யாவின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ: இயக்குநர் ஆனந்த் மேனன் இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் வாழ. இந்தப் படத்தில் நடிகர்கள் சிஜு சன்னி, அமித் மோகன் ராஜேஸ்வரி, ஜோமோன் ஜோதிர், அனுராஜ் ஓ.பி., அன்ஷித் அனு, சாஃப், ஜெகதீஷ், கோட்டயம் நசீர், அஸீஸ் நெடுமங்காட் மற்றும் நோபி மார்கோஸ் ஆகியோர் நடித்து இருந்தனர்.

வாழ்க்கையில் எதாவது செய்து சாதித்து விடவேண்டும் என்று என்னும் இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே: இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே. இந்தப் படத்தில் நடிகர் பேசில் ஜோசஃப் நாயகனாகவும் நடிகை தர்ஷனா ராஜேந்திரன் நாயகியாவும் நடித்து இருந்தனர்.

திருமணம் ஆன இளைஞர் மனைவி என்பவள் வீட்டில் வேலை செய்ய வேண்டும் கணவருக்கு பணிவடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு நேர் எதிர் குணத்தை கொண்டவராக அவரது மனைவி இருக்கிறார். இவர்களின் வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதே படத்தின் கதை.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் ஓடிடியில் வெளியான பிறகு தென்னிந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வேலை செய்யும்போது பாடல் கேட்பது நல்லதா?
வேலை செய்யும்போது பாடல் கேட்பது நல்லதா?...
Curd Vs Yogurt: இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது சிறந்தது?
Curd Vs Yogurt: இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது சிறந்தது?...
குழந்தைகளுக்கு ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் - அறிகுறிகள் என்ன?
குழந்தைகளுக்கு ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் - அறிகுறிகள் என்ன?...
தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம்.. ஐசிசி கொடுத்த சிறப்பு கௌரவம்..!
தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம்.. ஐசிசி கொடுத்த சிறப்பு கௌரவம்..!...
இரவில் அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்கிறீர்களா?
இரவில் அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்கிறீர்களா?...
ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ள பெஸ்ட் மலையாளப் படங்களின் லிஸ்ட் இதோ
ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ள பெஸ்ட் மலையாளப் படங்களின் லிஸ்ட் இதோ...
சமூக வலைதள சேலஞ்ச் வீடியோ - உயிரிழந்த 19 வயது மாணவி
சமூக வலைதள சேலஞ்ச் வீடியோ - உயிரிழந்த 19 வயது மாணவி...
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? மான்டி பனேசர் ட்விஸ்ட்
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? மான்டி பனேசர் ட்விஸ்ட்...
விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடல் வெளியானது!
விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடல் வெளியானது!...
ராகவா லாரன்ஸ் - நிவின் பாலியின் 'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர்?
ராகவா லாரன்ஸ் - நிவின் பாலியின் 'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர்?...
சிலம்பரசன் - வெற்றிமாறனின் கூட்டணி படத்தின் கதைக்களம் இதுவா?
சிலம்பரசன் - வெற்றிமாறனின் கூட்டணி படத்தின் கதைக்களம் இதுவா?...