Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜயின் பிறந்த நாளில் ரீ ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படம் – உற்சாகத்தில் ரசிகர்கள்

Actor Vijay: கோலிவுட் சினிமாவை ஆட்சி செய்து வருபவர் நடிகர் விஜய், தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் அதிக அளவில் ரசிகர்களை கொண்ட நடிகர்களின் பட்டியளில் முன்னிலை வகிக்கிறார். இந்த நிலையில் நடிகர் விஜயின் பிறந்த நாளில் அவரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜயின் பிறந்த நாளில் ரீ ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படம் – உற்சாகத்தில் ரசிகர்கள்
விஜய்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Jun 2025 20:57 PM

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் (Actor Vijay). இவரது நடிப்பில் வெளியான படங்கள் பல சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. நாளைய தீர்ப்பு படத்தில் நாயகனாக தொடங்கிய இவரது பயணம் தற்போது வரை உள்ளது. தளபதி விஜயின் ரசிகர்களுக்கு சோகமான விசயம் என்ன என்றால் விஜய் தற்போது நடித்து வரும் ஜன நாயகன் படம் தான் அவர் நடிக்கும் கடைசிப் படம் என்று அறிவித்தது தான். ஜன நாயகன் படத்திற்காக ரசிகர்கள் ஆவளுடன் காத்து இருந்தாலும் அதுதான் அவரது நடிப்பில் பார்க்க போகிற கடைசிப் படம் என்பது அவர்களை வேதனை அடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரீ ரிலீஸ் என்பது தொடந்து நடைப்பெற்று வருகின்றது.

ரீ ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படங்கள்:

அந்த வகையில் தமிழ் சினிமாவிலும் முன்னதாக வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படங்களை திரையரங்குகளில் மீண்டும் படக்குழுவினர் ரிலீஸ் செய்து வருகின்றனர். இதில் நடிகர் விஜய் நடிப்பில் முன்னதாக வெளியான கில்லி, சச்சின் ஆகிய படங்கள் மீண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அது மட்டும் இன்றி வசூலிலும் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான கில்லி மற்றும் சச்சின் ஆகிய படங்கள் பட்டையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. ரீ ரிலீஸில் வசூல் மழை பொழிந்ததைக் படக்குழுவினர் கொண்டாடித் தீர்த்தனர்.

ரீ ரிலீஸ் ஆகும் விஜயின் மெர்சல் படம்:

இந்த நிலையில் நடிகர் விஜயின் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மெர்சல். இந்தப் படத்தில் விஜய் அப்பா மற்றும் இரண்டு மகன்கள் என மூன்று வேடங்களில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் அட்லி குமார் இயக்கி இருந்தார்.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, காஜல் அகர்வால், சமந்தா ரூத் பிரபு, கோவை சரளா, சத்யராஜ், யோகி பாபு, சத்யன், காளி வெங்கட் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.

படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அது போலவே ஏ.ஆர்.ரகுமானி இசையில் வந்த பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்ந்தனர். இந்த நிலையில் விஜயின் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்தப் படத்தை அவரது பிறந்த நாளை முன்னிட்டு கேரளாவில் ரீ ரிலீஸ் செய்கின்றனர்.

விஜயின் பிறந்த நாள் வருகின்ற ஜூன் மாதம் 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் படத்தை ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு கேரளாவில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலை செய்யும்போது பாடல் கேட்பது நல்லதா?
வேலை செய்யும்போது பாடல் கேட்பது நல்லதா?...
Curd Vs Yogurt: இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது சிறந்தது?
Curd Vs Yogurt: இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது சிறந்தது?...
குழந்தைகளுக்கு ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் - அறிகுறிகள் என்ன?
குழந்தைகளுக்கு ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் - அறிகுறிகள் என்ன?...
தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம்.. ஐசிசி கொடுத்த சிறப்பு கௌரவம்..!
தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம்.. ஐசிசி கொடுத்த சிறப்பு கௌரவம்..!...
இரவில் அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்கிறீர்களா?
இரவில் அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்கிறீர்களா?...
ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ள பெஸ்ட் மலையாளப் படங்களின் லிஸ்ட் இதோ
ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ள பெஸ்ட் மலையாளப் படங்களின் லிஸ்ட் இதோ...
சமூக வலைதள சேலஞ்ச் வீடியோ - உயிரிழந்த 19 வயது மாணவி
சமூக வலைதள சேலஞ்ச் வீடியோ - உயிரிழந்த 19 வயது மாணவி...
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? மான்டி பனேசர் ட்விஸ்ட்
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? மான்டி பனேசர் ட்விஸ்ட்...
விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடல் வெளியானது!
விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடல் வெளியானது!...
ராகவா லாரன்ஸ் - நிவின் பாலியின் 'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர்?
ராகவா லாரன்ஸ் - நிவின் பாலியின் 'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர்?...
சிலம்பரசன் - வெற்றிமாறனின் கூட்டணி படத்தின் கதைக்களம் இதுவா?
சிலம்பரசன் - வெற்றிமாறனின் கூட்டணி படத்தின் கதைக்களம் இதுவா?...