அட்லியின் இயக்கத்தில் மிஸ் செய்யக்கூடாத படங்களின் லிஸ்ட் இதோ!
Atlee Kumar: தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் அட்லி. இவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி தற்போது பான் இந்திய சினிமாவிலும் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

ராஜா ராணி: இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று கொண்டாடப்படும் இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அட்லி (Director Atlee Kumar). இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நசீம், சத்யராஜ், சந்தானம், சத்யன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து இருந்த நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். காதலில் தோல்வி அடைந்த இருவர் திருமணம் செய்துகொண்ட பிறகு என்ன நடக்கிறது.
அவர்களின் வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை மையமாக வைத்து இந்தப் படத்தை அட்லி இயக்கி இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தில் வெளியான பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
தெறி: இயக்குநர் அட்லி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தெறி. இந்தப் படத்தில் தளபதி விஜய் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இவருக்கு நாயகியாக நடிகை சமந்தா ரூத் பிரபு நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராதிகா சரத்குமார், மகேந்திரன், நைனிகா, ஏமி ஜாக்சன் மொட்டை ராஜேந்திரன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இன்றைய கால அப்பா மகள் பாசம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல படத்தில் வரும் பாடல்களும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிகில்: இயக்குநர் அட்லி இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பிகில். இந்தப் படத்தில் தளபதி விஜய் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் அவர் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜாக்கி ஷெராஃப், விவேக், கதிர், டேனியல் பாலாஜி, முனிஷ்காந்த், ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, அமிர்தா ஐயர், வர்ஷா பொல்லம்மா, இந்த்ரஜா ஷங்கர், காயத்ரி ரெட்டி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். கால் பந்து விளையாட்டில் நடக்கும் அரசியலை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.