Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சூர்யா – வெங்கி அட்லூரியின் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது

Suriya 46 Movie: நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகி வரும் படம் சூர்யா 46. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

சூர்யா – வெங்கி அட்லூரியின் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது
சூர்யா 46Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Jun 2025 17:55 PM

நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 46-வது படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் இணைந்தார். இந்த தகவல் இணையத்தில் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா ரெட்ரோ படத்தின் புரமோஷன் விழாவில் வெங்கி அட்லூரி உடனான கூட்டணி குறித்தும் அந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரெட்ரோ படத்தின் வெளியீட்டிற்கு பிறகு சூர்யாவின் 46-வது படம் குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து படத்தின் பூஜையும் நடைப்பெற்றது.

அந்த படத்தின் பூஜையில் நடிகர் சூர்யா இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றும் படத்தின் நாயகி நடிகை மமிதா பைஜூ கலந்து கொண்டார். இதன் புகைப்படங்கள் வெளியான பிறகே மமிதா பைஜூ நாயகியாக நடிக்க உள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் வெங்கி அட்லூரி கூட்டணி:

கடந்த 2023-ம் ஆண்டு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான வாத்தி படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் முதன் முறையாக இவருடன் கூட்டணி வைத்தார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் தற்போது உருவாக உள்ள சூர்யா 46 படம் என தொடர்ந்து மூன்றாவது முறையாக இவரது படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பை தொடங்கியது சூர்யா 46 படக்குழு:

இந்த நிலையில் சூர்யாவின் 46-வது படத்தின் பூஜை கடந்த மே மாதம் 19-ம் தேதி 2025-ம் ஆண்டு நடைப்பெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலனது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு சூர்யா 46 படக்குழுவினர் பழனி மலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றும் நடிகர் சூர்யா உடன் படக்குழுவினரும் அங்கு சென்று இருந்தது குறிப்பிடப்பட்டு இருந்தது.

இணையத்தில் வைரலாகும் சூர்யா – தியா புகைப்படங்கள்:

இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட போது படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்தப் படப்பிடிப்பிற்காக நடிகர் சூர்யா தனது மகள் தியா உடன் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? மான்டி பனேசர் ட்விஸ்ட்
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? மான்டி பனேசர் ட்விஸ்ட்...
விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடல் வெளியானது!
விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடல் வெளியானது!...
ராகவா லாரன்ஸ் - நிவின் பாலியின் 'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர்?
ராகவா லாரன்ஸ் - நிவின் பாலியின் 'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர்?...
சிலம்பரசன் - வெற்றிமாறனின் கூட்டணி படத்தின் கதைக்களம் இதுவா?
சிலம்பரசன் - வெற்றிமாறனின் கூட்டணி படத்தின் கதைக்களம் இதுவா?...
விஜயின் பிறந்த நாளில் ரீ ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படம்...
விஜயின் பிறந்த நாளில் ரீ ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படம்......
6,500 ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு.. அச்சத்தில் பொதுமக்கள்!
6,500 ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு.. அச்சத்தில் பொதுமக்கள்!...
ரியோ ராஜின் 'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் முதல் பாடல் வெளியீடு!
ரியோ ராஜின் 'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் முதல் பாடல் வெளியீடு!...
ரஹ்மானின் இசை நிகழ்ச்சி: காண முடியாதவர்களுக்கு 50,000 இழப்பீடு
ரஹ்மானின் இசை நிகழ்ச்சி: காண முடியாதவர்களுக்கு 50,000 இழப்பீடு...
அட்லியின் இயக்கத்தில் மிஸ் செய்யக்கூடாத படங்களின் லிஸ்ட் இதோ!
அட்லியின் இயக்கத்தில் மிஸ் செய்யக்கூடாத படங்களின் லிஸ்ட் இதோ!...
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் இவர்தானா? பிசிசிஐ போடும் திட்டம்!
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் இவர்தானா? பிசிசிஐ போடும் திட்டம்!...
குபேரா படத்திற்கு சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் என்ன?
குபேரா படத்திற்கு சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் என்ன?...