Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இது போதும் எனக்கு… இது போதுமே… வைரலாகும் நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டா பதிவு!

Actress Pooja Hegde: தமிழ் சினிமா மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனாலும் இவர் தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளிலேயே முன்னணி நடிகையாக இருந்து வந்தார். சமீப காலமாகதான் தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இது போதும் எனக்கு… இது போதுமே… வைரலாகும் நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டா பதிவு!
நடிகை பூஜா ஹெக்டேImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 09 Jun 2025 15:33 PM

தமிழ் சினிமாவில் முக மூடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை பூஜா ஹெக்டே (Actress Pooja Hegde). ஆனால் அதன் பிறகு தமிழ் சினிமாவில் அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. மாறாக தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். முக மூடி படம் வெளியாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜயின் பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்து இருந்தார் நடிகை பூஜா ஹெக்டே. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும் பீஸ்ட் படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை பூஜா ஹெக்டே:

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே நடிகர் சூர்யாவிற்கு நாயகியாக ரெட்ரோ படத்தில் நடித்து இருந்தார். மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ருக்மணி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். சாதுவான பெண்ணாக ரெட்ரோ படத்தில் வலம் வந்து ரசிகர்களின் மனதைக் கொள்ளை அடித்தார் நடிகை பூஜா ஹெக்டே. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் உடன் இணைந்து ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார்.

விஜயின் கடைசிப் படமான இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடிப்பது தனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் நடிகர் விஜய் இனி நடிக்க மாட்டார் என்பது ஒரு ரசிகையாக மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

வைரலாகும் நடிகை பூஜா ஹெக்டேவின் பதிவு:

இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டேவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் வெளியிட்ட பதிவில் ஒரு கப் டீ மற்றும் பார்லேஜி பிஸ்கேட். இது இரண்டும் தான் வீட்டை விட்டு வெளியே இருக்கும் போது ஒரு மருந்தாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.