Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜன நாயகன் படத்தின் ரிலீஸில் விஜய் எடுத்த அதிரடி முடிவு? வைரலாகும் தகவல்

Jana Nayagan Movie: நடிகர் விஜய் நடிப்பில் தற்போது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் ஓடிடி உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமைகள் முன்னதாக விற்பனை ஆகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் ஜன நாயகன் படத்தின் விநியோகத்தில் விஜய் முக்கிய முடிவு எடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஜன நாயகன் படத்தின் ரிலீஸில் விஜய் எடுத்த அதிரடி முடிவு? வைரலாகும் தகவல்
விஜய்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 09 Jun 2025 11:06 AM

கோலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சிலப் படங்களில் நடித்த நடிகர் விஜய் (Actor Vijay) பின்னர் நாயகனாக அவதாரம் எடுத்தார். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய காலத்தில் பல எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற இவர் அதனை நேர்மறையாக மாற்ற பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார் என்றே சொல்லவேண்டும். 1992-ம் ஆண்டு நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அவதாரம் எடுத்த நடிகர் விஜய் சுமார் 33 ஆண்டுகளாக கோலிவுட் சினிமாவை கலக்கி வருகிறார் என்றே சொல்லலாம். கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் இந்த நேரத்தில் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் விஜய் அறிவித்தது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சினிமாவில் நடிப்பதில் இருந்து விலக முடிவு செய்த விஜய்:

சினிமாவை பொருத்தவரை தனக்கு மார்க்கெட் இல்லை படம் எதுவும் வரவில்லை என்ற நேரத்தில் தான் ஒரு நடிகர் தனது சினிமா ஓய்வு குறித்து முடிவு எடுப்பார். ஆனால், சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் போது தனது ஓய்வை அறிவித்தார் விஜய். அதற்கு காரணம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார்.

இந்த கட்சியின் மூலம் தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அவரது எண்ணம் என்று தெரிவித்த அவர் அரசியலில் தீவிரமாக களம் இறங்க உள்ளதால் இனி படங்களில் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாக முன்னதாக அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி விஜய் தற்போது தனது 69-வது படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இதுவே தனது நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் என்று தெரிவித்து இருந்தார்.

விஜயின் இறுதிப் படமான ஜன நாயகன்:

நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாக உள்ள இந்த ஜன நாயகன் படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியியோல் நடித்து வருகிறார்.

இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், வரலட்சுமி சரத்குமார், மமிதா பைஜு, மோனிஷா பிளெஸ்ஸி என பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

ஜன நாயகன் படத்தின் விநியோக உரிமை:

ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல அமேசான் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும், சாட்டிலைட் உரிமையை பிரபல சன் டிவி கைப்பற்றி உள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு நடிகர் விஜய் முக்கிய அறிவிப்பை கொடுத்ததாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. அதன்படி ஜன நாயகன் படத்தின் விநியோக உரிமையை அரசியல் பின்புலன் உள்ள எந்த நிறுவனத்திற்கும் வழங்க கூடாது என்று கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது உண்மையா அல்லது வதந்தியா என்பது படம் வெளியாகும் போதே தெரியவரும்.

முந்திரிப் பழத்தை யார் சாப்பிடலாம்... அதன் நன்மைகள் என்ன?
முந்திரிப் பழத்தை யார் சாப்பிடலாம்... அதன் நன்மைகள் என்ன?...
விஜய்யுடன் கூட்டணியா? - பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!
விஜய்யுடன் கூட்டணியா? - பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!...
மதுரை பஸ் நிலையத்தில் டிரைவரை செருப்பால் தாக்கிய உதவி மேலாளர்...
மதுரை பஸ் நிலையத்தில் டிரைவரை செருப்பால் தாக்கிய உதவி மேலாளர்......
குடும்பத்தில் பிரச்னையை உண்டாக்கும் வாஸ்து தவறுகள்!
குடும்பத்தில் பிரச்னையை உண்டாக்கும் வாஸ்து தவறுகள்!...
தக் லைஃப் படத்தை வெளியிட பாதுகாப்பு கோரிய வழக்கு தள்ளுபடி!
தக் லைஃப் படத்தை வெளியிட பாதுகாப்பு கோரிய வழக்கு தள்ளுபடி!...
கர்நாடகாவில் காதல் வஞ்சனைக் கொலை: நண்பனின் துரோகம்..
கர்நாடகாவில் காதல் வஞ்சனைக் கொலை: நண்பனின் துரோகம்.....
கொலஸ்ட்ரால் பரிசோதனை ஏன் அவசியம்? தெரிந்து கொள்ள வேண்டியவை..!
கொலஸ்ட்ரால் பரிசோதனை ஏன் அவசியம்? தெரிந்து கொள்ள வேண்டியவை..!...
தேன் நிலவில் கணவனை கொலை செய்த மனைவி - ஷாக் சம்பவம்!
தேன் நிலவில் கணவனை கொலை செய்த மனைவி - ஷாக் சம்பவம்!...
சூர்யா நடிக்கும் படத்தை தயாரிக்கும் கமல் ஹாசன்? கசிந்தது தகவல்
சூர்யா நடிக்கும் படத்தை தயாரிக்கும் கமல் ஹாசன்? கசிந்தது தகவல்...
யோகாவில் இத்தனை வகைகள், பலன்களா? - பாபா ராம்தேவ் பகிரும் தகவல்கள்
யோகாவில் இத்தனை வகைகள், பலன்களா? - பாபா ராம்தேவ் பகிரும் தகவல்கள்...
ஜன நாயகன் படத்தின் ரிலீஸில் விஜய் எடுத்த அதிரடி முடிவு?
ஜன நாயகன் படத்தின் ரிலீஸில் விஜய் எடுத்த அதிரடி முடிவு?...