Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மூன்றாவது தலைமுறையாக இசைத் துறையில் இணைந்த இளையராஜா பேரன்!

Ilayaraja Grandson Yatheeswar Raja: சினிமாவில் நடிப்புத் துறையில் வாரிசுகள் தொடந்து அறிமுகம் ஆகி வருவது போல தற்போது இசைத் துறையிலும் வாரிசுகள் தொடர்ந்து அறிமுகம் ஆகி வருகின்றது. அந்த வகையில் இசைஞானி இளையராஜாவின் பேரன் தற்போது பக்தி பாடல் ஆல்பம் ஒன்றை வெளியிட்டு இசைத்துறையில் அறிமுகம் ஆகியுள்ளார்.

மூன்றாவது தலைமுறையாக இசைத் துறையில் இணைந்த இளையராஜா பேரன்!
இளையராஜாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 08 Jun 2025 20:24 PM

தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவில் வாரிசுகளின் வருகை என்பது தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கின்றது. நடிகர்கள் தங்களது வாரிசுகளை அடுத்த நடிகர்களாக அறிமுகம் செய்து வருவது போல இசைத் துறையில் உள்ளவர்களும் அடுதடுத்து தங்களது வார்சுகளை சினிமாவில் அறிமுகம் செய்து வருவது தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது இளையராஜா (Music Director Ilaiyaraaja) குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறையினர் தற்போது இசைத் துறையில் அறிமுகம் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி இளியராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவின் மகன் யத்தீஸ்வர் ராஜா தற்போது பக்தி பாடல் ஒன்றை இசையமைத்து திருவண்ணாமலையில் இன்று வெளியிட்டுள்ளார். இளையராஜா குடும்பத்தில் இருந்து தற்போது மூன்றாவது தலைமுறை சினிமாவிற்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமா கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜா:

தமிழ் சினிமாவில் அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் இளையராஜா. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவராக உள்ளார் இளையராஜா. இவர் 20 வருடங்களுக்கு முன்பு இசையமைத்த பாடல்களுக்கு தற்போது ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இசைஞானி இளையராஜாவிற்கு  மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் முதல் மகன் இசையமைப்பாளரும் பாடகருமான கார்த்திக் ராஜா, இரண்டாவது பாடகி பவதாரணி (இவர் கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்டார்) மூன்றாவதாக இசையமைப்பாளரும் பாடகருமான யுவன் சங்கர் ராஜா ஆகியோர் உள்ளனர்.

இதில் கார்த்திக் ராஜா இசையமைப்பாளராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பிரபலம் ஆகவில்லை என்றே சொல்லலாம். ஆனாள் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நபராக பெரிய இசையமைப்பாளராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் பேரன் யத்தீஸ்வர் ராஜா அறிமுகம்:

சினிமாவில் மூன்றாவது தலைமுறையாக அறிமுகம் ஆகிறார் இசையமைப்பாளர் யத்தீஸ்வர் ராஜா. இவரது தந்தை கார்த்திக் ராஜாவிற்கு தமிழ் சினிமா பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்றாலும் யத்தீஸ்வர் ராஜா தற்போது இசையமைப்பாளராக சினிமாவில் தற்போது அறிமுகம் ஆக உள்ளார். அதற்கு முன்னதாக ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடைய யத்தீஸ்வர் ராஜா தனது இசையில் முதல் பாடலாக ஒரு பக்திப் பாடல் ஒன்றை இன்று திருவண்ணாமலியில் வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து செய்தியாளர்களிம்ட பேசிய யத்தீஸ்வர் தான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பு பக்தி பாடலை இசையமைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு எனது தாத்தா கூறிய சில அறிவுறைகளை பின்பற்றினேன். மேலும் எனது அப்பா பாடல் வரிகளை கவனித்துக்கொண்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.