டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை வெகுவாகப் பாராட்டிய நடிகர் கிச்சா சுதீப்!
Tourist Family Movie: நடிகர்கள் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடியது மட்டும் இன்றி பிரபங்களும் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் கிச்சா சுதீப் படத்தைப் பாராட்டி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தப் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Director Abhishan Jeevinth) இயக்கி இருந்தார். இவரது இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகர் சிம்ரன் நாயகனாகவும் நடிகை சிம்ரன் நாயகியாகவும் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலர் தங்களது மனம் நிறைய வாழ்த்துகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகு தற்போது ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் படத்தை திரையரங்குகளில் பார்க்க தவறியவர்கள் ஓடிடியில் படத்தைப் பார்த்து பாராட்டி வருகின்றனர்.
டூரிஸ் ஃபேமிலி படத்தைப் பாராட்டிய நடிகர் கிச்சா சுதீப்:
இந்த நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பார்த்த பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் படத்தைப் வெகுவாகப் பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகின்றது. அந்தப் பதிவில் நடிகர் கிச்சா சுதீப் கூறியுள்ளதாவது, சமீபத்திய காலங்களில் மிகச்சிறந்த எழுத்து மற்றும் செயல்படுத்தல்களில் ஒன்று டூரிஸ்ட் ஃபேமிலி.




நடிகர் கிச்சா சுதீப் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
One of the finest writing and execution in recent times.#TouristFamily surely is a landmark story telling which kept me glued to my seat. Each character has it’s own moments and space,,and every character flawlessly portrayed by actors. Fantabulous casting.
Music is another…— Kichcha Sudeepa (@KicchaSudeep) June 7, 2025
இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் நிச்சயமாக ஒரு மைல்கல் கதை சொல்லலை கூறியுள்ளது. மேலும் இந்தப் படம் என்னை என் இருக்கையில் ஒட்டி வைத்தது என்று கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களது சிறப்பான நடிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இயக்குநர் அழகான முறையில் சித்தரித்து இருந்தார். அனைத்து நடிகர்களும் அற்புதமான நடிப்பை வெளியிட்டது போல இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை மற்றொரு சிறந்த சொத்து என்று தெரிவித்து இருந்தார். மேலும் எனது நண்பர் அபிஷன் ஜீவிந்துக்கு வாழ்த்துக்கள் மற்றும் முழு குழுவிற்கும் வாழ்த்துக்கள் என்று நடிகர் கிச்சா சுதீப் அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.