Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இதெல்லாம் உலகில் ஒரே மனிதன் நம் ஏ.ஆர்.ரகுமானால் மட்டுமே முடியும் – செல்வராகவன் புகழாரம்

Director Selvaraghavan talks about AR Rahman: கோலிவுட் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவில் தான் பார்க்கும் படங்கள் சிறப்பாக இருக்கிறது என்றால் அதனைப் பாராட்ட தவறியதே இல்லை இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பாடல் ஒன்றை வெகுவாகப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இதெல்லாம் உலகில் ஒரே மனிதன் நம் ஏ.ஆர்.ரகுமானால் மட்டுமே முடியும் – செல்வராகவன் புகழாரம்
செல்வராகவன், ஏ.ஆர்.ரகுமான்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jun 2025 20:22 PM

இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam) இயக்கத்தில் நடிகர்கமல் ஹாசன் (Actor Kamal Haasan) நாயகனாக நடித்து ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். நாயகன் படத்தை தொடர்ந்து சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி அமைந்ததை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை அளித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசனும் நாயகனாக நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து அசோக் செல்வன், த்ரிஷா கிருஷ்ணன், ஜோஜூ ஜார்ஜ், அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, சான்யா மல்கோத்ரா என பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

தக் லைப் படத்தின் ஏ.ஆர்.ரகுமான் இசையை கொண்டாடும் ரசிகர்கள்:

தக் லைஃப் படத்தினை திரையரங்குகளில் பார்த்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் கொண்டாடி வருவதைப் போல படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இயக்குநர் செல்வராகவனும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் செல்வராகவன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையை புகழ்ந்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ஒரு பாடல் கேட்டு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போய் – உயிரில் மின்சாரம் பாய்ந்து கேட்டது முதல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதெல்லாம் உலகில் ஒரே மனிதனால் – நம் A.R. ரஹ்மான் அவர்களால் மட்டுமே முடியும் என்று முத்த மழைப் பாடலை புகழ்ந்து பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் செல்வராகவன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

தக் லைஃப் படத்தில் இடம் பெறாத முத்த மழை பாடல்:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தக் லைஃப் படத்தில் 9 பாடல்கள் இசையமைக்கப்பட்டு இருந்தாலும் படத்தில் 5 பாடல்கள் மட்டுமே ஒளிபரப்பானது. இசை வெளியீட்டு விழாவில் பிரபலம் ஆன முத்த மழை பாடல் தக் லைஃப் படத்தில் இடம் பெறாதது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மீன் சாப்பிட்டால் முடி வளருமா? உண்மை என்ன? விவரம் இதோ
மீன் சாப்பிட்டால் முடி வளருமா? உண்மை என்ன? விவரம் இதோ...
கண் பார்வைக்கு நல்லது... பூசணியில் இவ்வளவு நன்மைகளா?
கண் பார்வைக்கு நல்லது... பூசணியில் இவ்வளவு நன்மைகளா?...
கருண் நாயர் கிட்டத்தட்ட உறுதி.. சூசகமாக சொன்ன கவுதம் கம்பீர்..!
கருண் நாயர் கிட்டத்தட்ட உறுதி.. சூசகமாக சொன்ன கவுதம் கம்பீர்..!...
ஓடும் ரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த நபருக்கு நேர்ந்த துயரம்!
ஓடும் ரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த நபருக்கு நேர்ந்த துயரம்!...
500 ரூபாய் நோட்டு கைவிடப்படுவதாக உலா வரும் தகவல் பொய்யானது - அரசு
500 ரூபாய் நோட்டு கைவிடப்படுவதாக உலா வரும் தகவல் பொய்யானது - அரசு...
முழங்கால்களில் வலி இருக்கிறதா? இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்!
முழங்கால்களில் வலி இருக்கிறதா? இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்!...
கமல் நடிப்பில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய காமெடிப் படங்கள்
கமல் நடிப்பில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய காமெடிப் படங்கள்...
கூகுள் குரோம் பயன்படுத்துகிறீர்களா ? காத்திருக்கும் ஆபத்து
கூகுள் குரோம் பயன்படுத்துகிறீர்களா ? காத்திருக்கும் ஆபத்து...
திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது, ஆனால்.. அமித் ஷா ட்விஸ்ட்!
திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது, ஆனால்.. அமித் ஷா ட்விஸ்ட்!...
இதெல்லாம் உலகில் ஒரே மனிதன் நம் ஏ.ஆர்.ரகுமானால் மட்டுமே முடியும்
இதெல்லாம் உலகில் ஒரே மனிதன் நம் ஏ.ஆர்.ரகுமானால் மட்டுமே முடியும்...
பிரமாண்டமாக நடந்த ரிங்கு சிங் - பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம்!
பிரமாண்டமாக நடந்த ரிங்கு சிங் - பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம்!...