Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சூர்யா நடிக்கும் படத்தை தயாரிக்கும் கமல் ஹாசன்? கசிந்தது தகவல்

Actor Suriya: ரெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தற்போது இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் பிசியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை கமல் ஹாசன் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

சூர்யா நடிக்கும் படத்தை தயாரிக்கும் கமல் ஹாசன்? கசிந்தது தகவல்
சூர்யா, கமல் ஹாசன்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Jun 2025 11:41 AM

நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்த படம் ரெட்ரோ. பல ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் மகிழ்ச்சியில் இருந்தனர் சூர்யாவும் அவரது ரசிகர்களும். இந்தப் படத்திற்கு முன்னதாக வெளியான படங்கள் தொடர் தோல்வியை கண்டதால் ரெட்ரோ படத்தின் வெற்றி அவர்களை ஆசுவாசப்படுத்தியது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்த நிலையில் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்த நிலையில் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெங்கி அட்லூரி உடன் கூட்டணி வைத்த சூர்யா:

ரெட்ரோ படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டது. அப்போது ஹைதராபத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூர்யா இயக்குநர் வெங்கி அட்லூரி உடனான கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகர் சூர்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

காரணம் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் லக்கி பாஸ்கர். இந்தப் படம் பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதன் காரணமாகவே சூர்யா அவருடன் இணைந்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைப்பெற்றது.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜு நடிக்கிறார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். இந்த கூட்டணி நிச்சயமாக வெற்றிக் கூட்டணியாக அமையும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கமல் ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா?

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் அடுத்தப் படம் குறித்த தகவல் சினிமா வட்டாரங்களில் கசிந்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் வீர தீர சூரன் படத்தை இயக்கிய இயக்குநர் அருண் குமாரின் அடுத்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக முன்பு தகவல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது.

இந்த நிலையில் அந்தப் படத்தில் நடிகர் சூர்யா தான் நாயகனாக நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்திரிப் பழத்தை யார் சாப்பிடலாம்... அதன் நன்மைகள் என்ன?
முந்திரிப் பழத்தை யார் சாப்பிடலாம்... அதன் நன்மைகள் என்ன?...
விஜய்யுடன் கூட்டணியா? - பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!
விஜய்யுடன் கூட்டணியா? - பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!...
மதுரை பஸ் நிலையத்தில் டிரைவரை செருப்பால் தாக்கிய உதவி மேலாளர்...
மதுரை பஸ் நிலையத்தில் டிரைவரை செருப்பால் தாக்கிய உதவி மேலாளர்......
குடும்பத்தில் பிரச்னையை உண்டாக்கும் வாஸ்து தவறுகள்!
குடும்பத்தில் பிரச்னையை உண்டாக்கும் வாஸ்து தவறுகள்!...
தக் லைஃப் படத்தை வெளியிட பாதுகாப்பு கோரிய வழக்கு தள்ளுபடி!
தக் லைஃப் படத்தை வெளியிட பாதுகாப்பு கோரிய வழக்கு தள்ளுபடி!...
கர்நாடகாவில் காதல் வஞ்சனைக் கொலை: நண்பனின் துரோகம்..
கர்நாடகாவில் காதல் வஞ்சனைக் கொலை: நண்பனின் துரோகம்.....
கொலஸ்ட்ரால் பரிசோதனை ஏன் அவசியம்? தெரிந்து கொள்ள வேண்டியவை..!
கொலஸ்ட்ரால் பரிசோதனை ஏன் அவசியம்? தெரிந்து கொள்ள வேண்டியவை..!...
தேன் நிலவில் கணவனை கொலை செய்த மனைவி - ஷாக் சம்பவம்!
தேன் நிலவில் கணவனை கொலை செய்த மனைவி - ஷாக் சம்பவம்!...
சூர்யா நடிக்கும் படத்தை தயாரிக்கும் கமல் ஹாசன்? கசிந்தது தகவல்
சூர்யா நடிக்கும் படத்தை தயாரிக்கும் கமல் ஹாசன்? கசிந்தது தகவல்...
யோகாவில் இத்தனை வகைகள், பலன்களா? - பாபா ராம்தேவ் பகிரும் தகவல்கள்
யோகாவில் இத்தனை வகைகள், பலன்களா? - பாபா ராம்தேவ் பகிரும் தகவல்கள்...
ஜன நாயகன் படத்தின் ரிலீஸில் விஜய் எடுத்த அதிரடி முடிவு?
ஜன நாயகன் படத்தின் ரிலீஸில் விஜய் எடுத்த அதிரடி முடிவு?...