Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குபேரா படத்திற்கு சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் என்ன?

Kubera Movie Censor Update: நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் குபேரா. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது படத்திற்கு சென்சார் போர்டு அளித்த சர்ட்டிபிகேட் விபரம் வெளியாகியுள்ளது.

குபேரா படத்திற்கு சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் என்ன?
குபேராImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Jun 2025 19:19 PM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ராயன். இது தனுஷ் நடிப்பில் வெளியான 50-வது படம் ஆகும். இந்தப் படத்தை நடிகர் தனுஷே எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி மற்றும் சரவணன் என பலரும் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

சேகர் கம்முலா உடன் கூட்டணி வைத்த தனுஷ்:

ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா உடன் கூட்டணி வைத்தார். முன்னதாக சேகர் கம்முலா தெலுங்கில் இயக்கிய ஃபிதா மற்றும் லவ் ஸ்டோரி படங்கள் தென்னிந்திய மொழிகளில் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் இந்த குபேரா படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதில் நடிகர் தனுஷ் பிச்சைகாரன் போல காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குபேரா படத்தின் சென்சார் அப்டேட்:

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த குபேரா படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் சென்சார் அப்டேட் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதன்படி படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழையும் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 15 நிமிடங்களாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து படக்குழு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலாலும் எக்ஸ் தள பதிவு: