Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் விமல் என் வாழ்க்கையில் வரம் போல வந்தவர்… சூரியின் நெகிழ்ச்சிப் பதிவு

Actor Soori talks about actor Vimal: நடிகர் சூரி நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் மாமன். முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர் விமல் என் வாழ்க்கையில் வரம் போல வந்தவர்… சூரியின் நெகிழ்ச்சிப் பதிவு
நடிகர் விமல்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Jun 2025 10:58 AM

நடிகர் சூரி (Actor Soori) நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு முழுக்க முழுக்க காமெடி ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான படம் மாமன். இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான இந்த மாமன் படத்தின் திரைக்கதையை நடிகர் சூரி தான் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் திரைகதை ஆசிரியராக நடிகர் சூரி அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூரியின் ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்து இருந்தார். மேலும் நடிகை சுவாஸிகா சூரியின் அக்காவாகவும் நடிகை கீதா கைலாசம் நடிகர் சூரியின் அம்மாவாகவும் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பாபா பாஸ்கர், ராஜ்கிரண், பால சரவணன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தாய்மாமன் – மருமகன் பாசப்பிணைப்பில் வெளியான மாமன்:

சூரியின் அக்கா சுவாஸிகாவிற்கு பல நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அதற்கு தாய் மாமனாக நடிகர் சூரி எல்லாத்தையும் இழுத்துப்போட்டு செய்கிறார். அந்தப் பாசத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள், பிரச்னைகள் என அனைத்தையும் இந்தப் படம் வெளிப்படையாக பேசியுள்ளது. முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்டால் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விமல் குறித்து புகழ்ந்து பேசிய சூரி:

நடிகர் விமல் மாமன் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூரி ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் விமல் என் வாழ்க்கையில் வரம் போல வந்தவர். உண்மையான நண்பனும், உறவாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறார். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், ஒரே ஒரு காட்சிக்காக, எதையும் எதிர்பார்க்காமல் அன்புக்காக வந்தது — அவருடைய மனிதத்தன்மையைச் காட்டும் சிறந்த எடுத்துக்காட்டு.

அவருடைய தோற்றம் மாமன் படத்துக்கு கிடைத்த ஒரு magical gift. அந்த சிறு காட்சி, எப்போதும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடிக்கும். உங்களுடைய அன்புக்கும், நேர்மையான மனதுக்கும், எங்களுக்காக எடுத்த நேரத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நடிகர் விமல் என்று அந்தப் பதிவில் அவர் தெரிவித்து இருந்தார்.

நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: