Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

மீண்டும் இயக்குநராகும் பிரதீப் ரங்கநாதன்… உற்சாகத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி பின்னர் நாயகனாக சக்கைப் போடு போட்டு வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கடந்த சில ஆண்டுகளாக நாயகனாக மட்டும் நடித்து வந்த நிலையில் தற்போது மீண்டு இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மீண்டும் இயக்குநராகும் பிரதீப் ரங்கநாதன்… உற்சாகத்தில் ரசிகர்கள்
பிரதீப் ரங்கநாதன்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Jun 2025 18:00 PM

தமிழ் சினிமாவில் தற்போது சென்சேஸ்னல் நடிகர்களின் பட்டியலில் உள்ளார் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இயக்குநராக அறிமுகம் ஆன இவர் பின்பு தானே இயக்கி நாயகனாக நடித்தார். படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி இவர் நாயகனாக நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான படம் டிராகன். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் மீண்டும் பிரதீப் ரங்கநாதன் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதன்படி சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படங்களை இயக்க பிரதீப் ரங்கநாதன் முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன்படி இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்தப் படத்தை தானே இயக்கி தானே நாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநராக அறிமுகம் ஆன பிரதீப் ரங்கநாதன்:

தமிழ் சினிமாவில் கோமாளி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் பிரதீப் ரங்கநாதன். கடந்த 2019-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், வினோதினி, ஷா ரா, ஆர்.ஜே. ஆனந்தி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

முழுக்க முழுக்க காமெடி எமோஷனை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் பட்டையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கிய படம் தான் லவ் டுடே.

பிரதீப் ரங்கநாதன் இன்ஸ்டா பதிவு:

கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனே நாயகனாகவும் நடித்து இருந்தார். இதில் நாயகியாக இவனா நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராதிகா, சத்யராஜ், யோகிபாபு மற்றும் ரவீனா ரவி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படம் இளைஞர்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பு வயதினரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதனுக்கு நாயகன் அந்தஸ்து கிடைத்தது.

2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள் - முதல் இடத்தில் எந்த நகரம்?
2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள் - முதல் இடத்தில் எந்த நகரம்?...
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!...
அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும்...
அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும்......
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...