Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

பிக்பாஸ் ராஜுவின் பன் பட்டர் ஜாம் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Bun Butter Jam Movie: தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் ராஜு ஜெயமோகன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் இரண்டாவது நாயகனாக நடித்து வந்தார். பின்னர் அதே சேனலில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார்.

பிக்பாஸ் ராஜுவின் பன் பட்டர் ஜாம் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
பன் பட்டர் ஜாம் Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 10 Jun 2025 17:43 PM

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற பிறகு அடுத்ததாக ராஜு ஜெயமோகன் (Actor Raju Jeyamohan) நீண்ட நாட்களாக என்ன செய்யப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் அவர் நாயகனாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படத்தின் அப்டேட் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற ஜூலை மாதம் 18-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பன் பட்டர் ஜாம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

சின்னத்திரையில் இருக்கும் போதே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ராஜு ஜெயமோகன். இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், சில சீரியல்களில் நடிகர்களாகவும் நடித்துள்ளார். அதன்படி இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனாக் காணும் காலங்கள் சீரியல் தொடங்கி கானா காணும் கலங்கள் கல்லூரி சாலை, ஆண்டாள் அழகர் மற்றும் சரவணன் மீனாட்சி என தொடர்ந்து ஹிட் சீரியல்களில் நடித்தார்.

இந்த சீரியல்களில் இவர் நாயகனாக நடிக்கவில்லை என்றாலும் இவர் நடிக்கும் கதாப்பாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் ராஜு ஜெயமேகன். பின்னர் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து டைட்டிலையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

வெள்ளித்திரையில் அறிமுகம் ஆன ராஜூ ஜெயமோகன்:

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே வெள்ளித்திரையில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார் ராஜூ. அதன்படி இவர் 2019-ம் ஆண்டு இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கத்தில் நடிகர் கவின் நாயகனாக நடித்த நட்புனா என்னனு தெரியுமா படத்தில் அவரது நண்பனா நடித்து இருந்தார். அதில் ராஜுவின் கதாப்பாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீ ராஜ் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நாயகனாக நடித்த முருங்கைகாய் சிப்ஸ் மற்றும் 2022-ம் ஆண்டு இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் ராஜூ ஜெயமோகன்.

2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள் - முதல் இடத்தில் எந்த நகரம்?
2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள் - முதல் இடத்தில் எந்த நகரம்?...
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!...
அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும்...
அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும்......
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...