ஒரு வாரம் தான் ஆச்சு அதுக்குள்ள இப்படியா? தக் லைஃப் படத்தின் திரையரங்க காட்சிகள் குறைப்பு!
Kamal Haasans Thug Life Movie: கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்காக பட்டா போட்டு அமர்ந்திருக்கும் நடிகர் கமல் ஹாசனின் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். இந்தப் படத்தின் திரையரங்கு காட்சிகள் தற்போது பாதியாக குறைத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

நடிகர் கமல் ஹாசன் (Actor Kamal Haasan) நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் (Director Maniratnam) மீண்டும் கமல் ஹாசனை வைத்து இயக்கிய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசனின் வளர்ப்பு மகனாக மற்றொரு நாயகனாக நடிகர் சிலம்பரசன் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது. சிலர் இது பக்கா மணிரத்னம் படம் என்று கூறிகிறனர். சிலர் படம் மிகவும் சுமார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாஸாக வெளியான் தக் லைஃப் படத்தின் திரையரங்க காட்சிகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தக் லைஃப் படத்தின் கலவையான விமர்சனத்தின் எதிரொலி:
அதன்படி படம் கடந்த வாரம் வெளியாகும் போது 4900-க்கும் அதிகமான திரையரங்க காட்சிகளுடன் கெத்தாக வெளியானது. ஆனால் பெரும் வரவேற்பைப் பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றதால் திரையரங்குகளில் கூட்டம் குறைந்துவிட்டது.




இதன் காரணமாக படத்தின் காட்சிகளையும் திரையரங்குகள் பாதியாக குறைத்துவிட்டது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன்படி தற்போது தக் லைஃப் படம் 2100 காட்சிகளாக மட்டுமே திரையிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது படத்தின் வசூலை பெரிய அளவில் பாதிக்கும் என்றும் கருத்து நிலவுகின்றது.
தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Thuglife In Cinemas Near You #Thuglife#KamalHaasan #SilambarasanTR
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan @abhiramiact @C_I_N_E_M_A_A #Nasser @manjrekarmahesh @TanikellaBharni… pic.twitter.com/gOqpYuzPWH— Raaj Kamal Films International (@RKFI) June 7, 2025
தக் லைஃப் படத்தால் ஏற்பட்ட சர்ச்சைகள்:
தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே தொடர்ந்து சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாமல் உள்ளது. அதன்படி படத்தின் ட்ரெய்லர் வெளியான போது த்ரிஷா மற்றும் கமல் ஹாசன் இருவரும் ரொமாஸ் செய்வது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் தன்னை விட அத்தனை வயது குறைந்த பெண்ணுடம் எப்படி இப்படி நட்டிக்க முடிகிறது என்று ட்ரோல் செய்தனர்.
அதே போல அதே ட்ரெய்லர் காட்சியில் நடிகர் கமல் ஹாசன் நடிகை அபிராமிக்கு உதட்டு முத்தம் கொடுப்பார். அதனைப் பார்த்த ரசிகர்களும் இத்தனை வயது பெரிய நபருடன் எப்படி இப்படி ஒரு காட்சி நடிக்க முடிகிறது என்று தொடர்ந்து இணையத்தில் ட்ரோல் செய்யத் தொடங்கினர். இது படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரித்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதற்கு இடையில் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்ற போது படத்தில் பாடகி தீ பாடிய பாடலை இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடியிருந்தார். இது யார் வெர்ஷன் சிறந்தது என்ற வாக்குவாதம் இணையத்தில் யார் பெருசு என்று அடிச்சுக்காட்டு என்பது போல பெரிதாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.