Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா… அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

கோலிவுட் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ரிவால்வர் ரீட்டா. இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா… அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
கீர்த்தி சுரேஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Jun 2025 21:13 PM

நடிகை கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh) நடிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, நாயகியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் கே சந்துரு (Director K Chandru) எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடிகர்கள் ராதிகா சரத்குமார், சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்ரவர்த்தி, கதிரவன், சென்ட்ராயன், அகஸ்டின், பிளேட் சங்கர், ராமச்சந்திரன், அக்ஷதா அஜித், குஹாசினி, காயத்ரி ஷான் என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

நாயகியை மையமாக வைத்து காமெடிப் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான பேஷன் ஸ்டுடியோஸ் & தி ரூட் பேனர்களின் கீழ் தயாரிப்பாளர்கள் உதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த நிலையில் படம் தற்போது ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வரிசைக் கட்டும் படங்கள்:

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது ரிவால்வர் ரீட்டா படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில் அடுத்ததாக கண்ணிவெடி படம் தயாராகி வருகின்றது. இந்தப் படத்திலும் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாயகியை மையமாக வைத்து உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பூஜை 2023-ம் ஆண்டே தொடங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் அறிமுக இயக்குநர் கணேஷ் ராஜ் இந்தப் படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹிட் அடித்தப் படங்கள்:

தமிழ் சினிமாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான ரஜினி முருகன், ரெமோ, தானா சேர்ந்த கூட்டம், சண்டக்கோழி 2, சார்க்கார், சாணிக் காகிதம் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.