Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பரியேறும் பெருமாள் படத்திற்கு நோ சொன்ன அதர்வா – இயக்குநர் மாரி செல்வராஜ் ஓபன் டாக்

Mari Selvaraj: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் பரியேறும் பெருமாள். இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க முதலில் நடிகர் அதர்வா முரளியிடம் தான் கேட்டதாக இயக்குநர் மாரி செல்வராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார்.

பரியேறும் பெருமாள் படத்திற்கு நோ சொன்ன அதர்வா – இயக்குநர் மாரி செல்வராஜ் ஓபன் டாக்
பரியேறும் பெருமாள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 11 Jun 2025 17:42 PM

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj). இவர் இன்று அதர்வா (Actor Atharvaa) நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தான் முதன் முதலாக இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தில் நாயகனாக நடிக்க வைக்க முதலில் அதர்வாவை அணுகியது குறித்து பேசியுள்ளார். “அதில் பரியேறும் பெருமாள் படத்தின் கதையை முதலில் எழுதிய உடனே நான் நடிக்க வைக்கனும் நினைத்த ஆள் அதர்வா. அந்தப் படத்தோட கதையை முதலில் சொன்னதும் நான் அதர்வா கிட்டதான். அவருக்கு அது நியாபகம் இருக்குமானு தெரியல நான் கதை சொல்லிட்டு வந்தது பிறகு அவர் பண்ணலனு சொல்லிட்டாரு. சொன்னா நம்புவீங்களா தெரியல நான் அன்னைக்கு முழுவதும் ரொம்ப ஃபீல் பன்னிட்டு இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் நான் முரளி சாரோட மிகப் பெரிய ரசிகன். ஒருதலைக்காதலுக்கா தலைவன் நிறைய பன்னி இருக்காரு. அது ஒருதலை காதல் என்பது சொல்லிட்டு அது சேராம போறது இல்ல சொல்லாமையே எத்தனை காதல்கள் இருக்குனு அவர் நமக்கு காட்டி இருப்பார்.

அப்படி இருக்கையில் முரளி சார் பையன் நம்ம படத்தில நடிக்கலனு சொல்லிட்டார்னு ரொம்ப கஷ்டப்பட்டேன். பரதேசி பாத்துட்டு நீங்க இத பன்னுவீங்கனு ரொம்ப நம்பிக்கையோட என் மனைவி கிட்ட சொல்லிட்டு வந்தேன் ஆனா அது நடக்கள” என்று மாரி செல்வராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இணையத்தில் வைரலாகும் இயக்குநர் மாரி செல்வராஜ் பேச்சு:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள்:

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பரியேறும் பெருமாள். இந்தப் படத்தின் மூலம் தான் இயக்குநர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் கதிர் நாயகனாகவும் நடிகை கயல் ஆனந்தி நாயகியாகவும் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, மாரிமுத்து, லிஜேஷ், ஹரி கிருஷ்ணன், ஷண்முக ராஜன், பூ ராமு என பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் போட்டிப் போட்டது குறிப்பிடத்தக்கது.