Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

நடிகர் அதர்வா நடிப்பில் வெளியானது டிஎன்ஏ படத்தின் ட்ரெய்லர்!

DNA - Official Trailer | நடிகர் அதர்வா நடிப்பில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வரிசைக்கட்டிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் நடிகர் அதர்வா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் டிஎன்ஏ. இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளியானது டிஎன்ஏ படத்தின் ட்ரெய்லர்!
டிஎன்ஏImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Jun 2025 12:19 PM

நடிகர் அதர்வா (Actor Atharvaa Murali) நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் டிஎன்ஏ. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா கேபி, சுப்ரமணியன் சிவா, கருணாகரன், பசங்க சிவகுமார் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் உடன் இணைந்து ஸ்ரீகாந்த் ஹரிஹரன் , சத்ய பிரகாஷ் , அனல் ஆகாஷ் , பிரவீன் சைவி , சாஹி சிவா பணியாற்றி உள்ளனர். மேலும் இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் உடன் இணைந்து அம்பேத்குமார் தயாரித்துள்ளார். படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதர்வாவின் டிஎன்ஏ படத்தின் ட்ரெய்லர்:

ட்ரெய்லரின் தொடக்கத்தில் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்… சாபத்தின் இரண்டு பக்கங்கள்… நன்மைக்கு இரண்டு பக்கங்கள்… என்று ஒரு விசயத்தில் இரண்டு பக்கங்கள் உள்ளது என்பதை உணர்த்த இதனைக் காட்டுகின்றனர். பிறகு அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் இருவருக்கு குடும்பத்தினர் இணைந்து திருமணம் செய்து வைக்கின்றனர்.

இவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை தங்களுடையது இல்லை என்று நிமிஷா சஜயன் நினைக்கிறார். மருத்துவ டெஸ்டில் குழந்தை அவர்களுடையது தான் என்று தெரிவித்தாலும் அதனை ஏற்க மறுக்கிறார் நிமிஷா. ஆனால் குடும்பத்தினரும், மருத்துவர்களும் அவருக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் மன அழுத்தம் என்று கூறுகின்றனர்.

டிஎன்ஏ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

ஆனால் நிமிஷாவின் கணவர் அதர்வா மட்டும் அவர் கூறுவதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்பதை ஆராயா முயற்சி செய்து வருகிறார். பின்பு என்ன நடந்தது என்பது படம் வெளியான பிறகே தெரியும். வித்யாசமான கதையம்சத்தை கொண்ட இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள் - முதல் இடத்தில் எந்த நகரம்?
2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள் - முதல் இடத்தில் எந்த நகரம்?...
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!...
அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும்...
அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும்......
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...