Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தொடங்கியது ஷூட்டிங்… போஸ்டர் வெளியிட்ட சூர்யா 46 படக்குழு!

Actor Suriyas 46th Movie: நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள படம் சூர்யா 46. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில் படம் குறித்த அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.

தொடங்கியது ஷூட்டிங்… போஸ்டர் வெளியிட்ட சூர்யா 46 படக்குழு!
சூர்யா 46Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 11 Jun 2025 17:45 PM

நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து இருக்கும் படம் சூர்யா 46. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் வெங்கி அட்லூரி (Director Venky Atluri) இயக்கி உள்ளார். இவர் முன்னதாக தமிழில் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான வாத்தி படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இறுதியாக இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் இவரை தெலுங்கு சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபலம் ஆக்கியது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் 46-வது படத்தை வெங்கி அட்லூரி இயக்க உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. மேலும் சூர்யா 46 படத்தின் பூஜை மே மாதம் 19-ம் தேதி 2025-ம் ஆண்டு நடைப்பெற்றது.

சூர்யா – வெங்கி அட்லூரி கூட்டணியில் தொடங்கியது சூர்யா 46:

நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சூர்யா 45 படத்தின் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது 46-வது படத்தின் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்.

சூர்யா 46 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

அந்த வகையில் படக்குழுவினர் தொடர்ந்து படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டு வருகின்றனர். தற்போது படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அதில் கொண்டாட்டம், உணர்ச்சி மற்றும் பொழுதுபோக்கை நோக்கிய முதல் படி சூர்யா 46 படப்பிடிப்பு தொடங்கியது என்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார். நடிகர் சூர்யாவின் இந்த 46-வது படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் வம்சி தயாரித்து வருகிறார்.

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் இந்தப் படம் பான் இந்திய அளவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் முன்னதாக வெளியான லக்கி பாஸ்கர் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தின் இசை குறித்து ஜிவி பிரகாஷ் பேச்சு!
சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தின் இசை குறித்து ஜிவி பிரகாஷ் பேச்சு!...
வீக் எண்ட் வந்தாச்சு... ஓடிடியில் என்ன படம் பார்க்க போறீங்க?
வீக் எண்ட் வந்தாச்சு... ஓடிடியில் என்ன படம் பார்க்க போறீங்க?...
கமல் - சிம்புவின் 'தக் லைஃப்' படத்தின் ஒருவார வசூல் இவ்வளவா?
கமல் - சிம்புவின் 'தக் லைஃப்' படத்தின் ஒருவார வசூல் இவ்வளவா?...
தனுஷ் - நாகார்ஜுனாவின் 'குபேரா' படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்!
தனுஷ் - நாகார்ஜுனாவின் 'குபேரா' படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்!...
ஜூன் 13-ம் தேதி நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
ஜூன் 13-ம் தேதி நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்...
விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ. 1 கோடி - டாடா குழுமம்
விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ. 1 கோடி - டாடா குழுமம்...
8 வாரங்களுக்கு முன்பே ஓடிடியில் வெளியாகும் தக் லைஃப் படம்?
8 வாரங்களுக்கு முன்பே ஓடிடியில் வெளியாகும் தக் லைஃப் படம்?...
விமானம் பயணத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
விமானம் பயணத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!...
ஆயில் இல்லா ஆரோக்கிய காலை உணவு! குறைந்த நேரத்தில் செய்வது எப்படி?
ஆயில் இல்லா ஆரோக்கிய காலை உணவு! குறைந்த நேரத்தில் செய்வது எப்படி?...
தனுஷ் உடன் போட்டிப் போடும் அதர்வா மற்றும் வைபவ்...
தனுஷ் உடன் போட்டிப் போடும் அதர்வா மற்றும் வைபவ்......
விமானி கொடுத்த கடைசி எச்சரிக்கை MAYDAY.. இதன் அர்த்தம் என்ன?
விமானி கொடுத்த கடைசி எச்சரிக்கை MAYDAY.. இதன் அர்த்தம் என்ன?...