அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள சீதா பயணம் படத்தின் டீசரை வெளியிட்ட வெங்கட் பிரபு!
Seetha Payanam (Tamil) - Official Teaser | கோலிவுட் சினிமா ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என்று அன்புடன் அழைக்கப்படுவர் நடிகர் அர்ஜுன் சார்ஜா. இந்த நிலையில் இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள சீதா பயணம் படத்தின் டீசர் இன்று வெளியாகி கவனம் பெற்று வருகின்றது.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மையோடு இருப்பவர் நடிகர் அர்ஜுன் (Actor Arjun Sarja). ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் தற்போது சீதா பயணம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் நிரஞ்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் (Aishwarya Arjun) நாயகியாகவும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் துருவ் சார்ஜா கேமியோ ரோலில் நடித்துள்ள இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சத்ய ராஜ், பித்திரி சதி, கோவை சரளா, சரண், சிரி ஹனுமந்த், மணி சந்தனா, சுமித்ரா, சஹஸ்ரா, டப்பிங் ஜானகி, ராஜ் குமார், நாக மகேஷ், போசானி கிருஷ்ண முரளி, ஜபர்தஸ்த் பானி, நர்ரா ஸ்ரீனு, மீன் வெங்கட், மல்லேஷ் யாதவ், பிரதிபா பிரதாப், ரஃபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சீதா பயணம் படத்தின் டீசர்:
இயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள சீதா பயணம் படத்தின் தமிழ் டீசரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். அந்த டீசரில் நாயகன் நிரஞ்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் ஆகியோர் எதிர்பாராத விதமாக ஒரு பயணத்தில் ஈடுபடுகின்றனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்படுவதுபோல காட்டப்படுகின்றது.
மேலும் இந்தப் படத்தில் பயணம், காதல், குடும்ப செண்டிமெண்ட் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனூப் ரூபன்ஸ் இசையமைத்துள்ள நிலையில் ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அர்ஜுன் இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் எக்ஸ் தள பதிவு:
Very happy to launch the intriguing teaser of #SeethaPayanam! 🌧✨
Best wishes to the entire team for this breezy love story 💐
Watch now 👇▶️ https://t.co/ndZKhEvHrg@akarjunofficial #AishwaryaArjun @NiranjanSudhi @DhruvaSarja @anuprubens @prakashraaj #Sathyaraj… pic.twitter.com/FfqBqToqiK
— venkat prabhu (@vp_offl) June 11, 2025
நடிகர் அர்ஜுன் சார்ஜா இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்கள்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் அர்ஜுன் சார்ஜா 1992-ம் ஆண்டு சேவகன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான ஜெய்ஹிந்த், தாயின்மணிக்கொடி, வேதம், ஏழுமலை, பரசுராம், மதராஸி, ஜெய்ஹிந்த் 2, சொல்லிவிடவா என பலப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.