விஜயின் பிறந்த நாளுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்கும் ஜன நாயகன் படக்குழு?
Jana Nayagan Movie: கோலிவுட் சினிமாவில் தற்போது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். விஜய் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் விஜயின் பிறந்த நாளில் ஜன நாயகன் படத்தில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் அஜித் குமார் (Ajith Kumar), கமல் ஹாசன், ரஜினிகாந்த், தனுஷ், சிலம்பரசன் என்று முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்தப் படங்களைப் பார்க்க ரசிகரகள் ஆர்வம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது என்றால் அது நடிகர் விஜய் (Actor Vijay) நடித்து வரும் ஜன நாயகன் படத்திற்கு தான். காரணம் இந்தப் படம் விஜயில் நடிப்பில் இறுதியாக வெளியாகும் படம் என்பதால் தான். பொதுவாக நடிகர்கள் தங்களின் சினிமா வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுப்பது மார்க்கெட் குறைவாக அல்லது மார்க்கெட் இல்லை என்ற நேரத்தில் தான். ஆனால் நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போதே தனது நடிப்பில்கடைசியாக வெளியாக உள்ள படம் இந்த ஜன நாயகன் என்று அறிவித்து விட்டார்.
சோகத்தில் விஜயின் ரசிகர்கள்:
நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ள காரணத்தால் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இது அவரது ரசிகர்கள் மட்டும் இன்றி சினிமா துறையில் உள்ள பிரபலங்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்தனர். அவரது நடிப்பை இனி திரையில் பார்க்க முடியாதா விஜயின் நடிப்பில் உருவாகும் 69-வது படமான ஜன நாயகன் தான் இறுதிப் படம் என்பதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




விஜயின் பர்த்டே ட்ரீட் கொடுக்கும் ஜன நாயகன் டீம்:
பொதுவாக பண்டிகை நாட்களில் திரைத் துறையில் எந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறதோ அவர்கள் படத்தில் இருந்து ஏதேனு அப்டேட்டை வெளியிடுவது வழக்கம். அதே போல படத்தில் நடிக்கும் நாயகன், நாயகி அல்லது முக்கிய நடிகர்களின் பிறந்த நாளிலும் படக்குழு தற்போது அப்டேட்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் வருகின்ற 22-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு தனது 51-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அன்று விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் நாயகனாக நடித்து வரும் ஜன நாயகன் படத்தில் இருந்து கிளிக்ஸ் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
We call him #JanaNayagan #ஜனநாயகன் ♥️#Thalapathy69FirstLook#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasu @Selva_ArtDir… pic.twitter.com/t16huTvbqc
— KVN Productions (@KvnProductions) January 26, 2025
விஜயின் பிறந்த நாளிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் படக்குழு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இணையத்தில் வைரலாகும் இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.