AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

8 வாரங்களுக்கு முன்பே ஓடிடியில் வெளியாகும் கமல் ஹாசனின் தக் லைஃப்?

Thug Life Movie OTT Update: படம் வெளியாவதற்கு முன்பு நடிகர் கமல் ஹாசன் தக் லைஃப் திரையரங்கில் வெளியானதில் இருந்து 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும் என்றும் தெரிவித்தார். மேலும் இதனை ஓடிடி உரிமையைப் பெற்ற நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

8 வாரங்களுக்கு முன்பே ஓடிடியில் வெளியாகும் கமல் ஹாசனின் தக் லைஃப்?
தக் லைஃப்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Jun 2025 20:57 PM IST

தமிழ் சினிமாவைப் (Kollywood Cinema) பொருத்தவரை ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் அந்தப் படம் 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் (OTT Release) வெளியாக வேண்டும் என்ற விதி உள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே சிலப் படங்களின் ஓடிடி உரிமைகள் விற்றுத் தீர்ந்துவிடும். அப்படி விற்கப்பட்ட படங்கள் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிடிக் கொண்டிருந்தாலும் ஓடிடியில் வெளியாகிவிடும். ஆனால் இந்தி திரையுலகைப் பொருத்தவரை ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் அது 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும். பல தென்னிந்திய மொழிப் படங்கள் இந்தி திரையுலகில் பெரிய அளவில் வெற்றி அடையாததற்கு ஒரு காரணம் இந்த ஓடிடி பிரச்னை என்றும் கூறலாம்.

இந்த நிலையில் இந்தப் பிரச்னையைக் தீர்க்கும் விதமக தக் லைஃப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே ஓடிடி வெளியீட்டை 8 வாரங்களுக்கு பிறகு ஒத்தி வைத்தது படக்குழு. இதற்கு தக் லைஃப் படத்தை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும் ஒப்புக்கொண்டது. இதன் பிறகே இந்தி திரையுலகில் தக் லைஃப் படத்திற்கு அதிக அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப் படம் குறித்து நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

விரைவில் ஓடிடியில் வெளியாகும் தக் லைஃப்:

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான தக் லைஃப் படம் எதிர்பார்த்த வெற்றியை மக்களிடம் பெறவில்லை. படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையேப் பெற்றது. வசூல் ரீதியாகவும் படம் வரவேற்பைப் பெறாதது படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் 4900 காட்சிகளுடன் திரையரங்குகளில் வெளியான தக் லைஃப் படம் ஒரே வாரத்தில் 2000க்கும் மேற்பட்ட காட்சிகள் குறைக்கப்பட்டு தற்போது 2100 காட்சிகள் மட்டுமே ஒளிபரப்படுகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் படம் கூடிய விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, படம் 8 வாரங்கள் வரை திரையரங்குகளில் நிச்சயம் ஓடாது என்று முடிவெடுத்த படக்குழு படத்தை ஒரு மாதத்திலேயே ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Follow Us