Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தனுஷ் உடன் போட்டிப் போடும் அதர்வா மற்றும் வைபவ்… ஜூன் 20-ம் தேதி தியேட்டரில் வரிசைக் கட்டும் படங்கள்

Theatre Release Movies: இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசைக் கட்டிக்கொண்டு தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே படங்கள் வரிசையாக வெளியாகத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது தனுஷ், அதர்வா, வைபவ் படங்களும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் உடன் போட்டிப் போடும் அதர்வா மற்றும் வைபவ்… ஜூன் 20-ம் தேதி தியேட்டரில் வரிசைக் கட்டும் படங்கள்
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Jun 2025 20:11 PM

2025-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கோலிவுட் சினிமாவில் (Kollywood Cinema) படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. எதிர்பார்க்கும் முன்னணி நடிகர்களின் படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் எதிர்பாராத விதமாக சின்ன சின்ன பட்ஜெட்டில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. முன்னணி நடிகர்களுக்காக படங்கள் ஹிட் அடிப்பதை தாண்டி தற்போது படத்தில் கதை நன்றாக இருந்தால் தான் படம் திரையரங்குகளில் வெற்றியடையும் என்ற நிலை வந்துள்ளது. அந்த வகையில் முன்னணி நடிகராக இருந்தாலும் சரி சின்ன சின்ன நடிகர்களாக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் படங்களுக்கு வரவேற்பைப் தெரிவித்து வருகின்றனர் மக்கள். இந்த நிலையில் வருகின்ற 20-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு மூன்று முக்கிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகும் குபேரா:

நடிகர் தனுஷ் ராயன் படத்தை தொடர்ந்து நடித்துள்ள படம் குபேரா. தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் சேகர் கம்முலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில் படம் வருகின்ற 20-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை 13-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

குபேரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ:

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடித்துள்ள படம் டிஎன்ஏ. இந்தப் படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர்,  ரித்விகா கேபி, சேத்தன், கருணாகரன், சுப்ரமணியன் சிவா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரெய்லர் நேற்று 11-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை பெற்ற நிலையில் படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்:

அறிமுக இயக்குனர்கள் அருண் கேசவ் மற்றும் விக்ரம் ராஜேஸ்வர் இருவரும் இணைந்து இயக்கியுள்ள படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர். இந்தப் படத்தில் நடிகர் வைபவ் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் அதுல்யா ரவி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ், ஜான் விஜய், மணி என பலர் நடித்துள்ளனர். படம் வருகின்ர ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.