நடிகர் மேத்யூ தாமஸின் நைட் ரைடர்ஸ் படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் இதோ
Night Riders Movie: மலையாள சினிமா மட்டும் இன்றி தற்போது தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் மேத்யூ தாமஸ். இந்த நிலையில் நடிகர் மேத்யூ தாமஸ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள நைட் ரைடர்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

மலையாள சினிமா மட்டும் இன்றி தற்போது தமிழ் சினிமாவிலும் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் மேத்யூ தாமஸ் (Actor Mathew Thomas). இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள நைட் ரைடர்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நபுவுல் அப்துல்லா இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் மேத்யூ தாமஸ் உடன் இணைந்து நடிகர்கள் ஆவேசம் படத்தின் மூலம் புகழ் பெற்ற ரோஷன் ஷானவாஸ் மற்றும் சரத் சபா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாரர் காமெடியை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து மீனாட்சி உன்னிகிருஷ்ணன், விஷ்ணு அகஸ்தியா, அபு சலீம், ரோனி டேவிட் ராஜ்,சினில் சைனுதீன், மெரின் பிலிப், நசீர் சங்கராந்தி, நௌஷாத் அலி மற்றும் சைத்ரா பிரவீன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த நைட் ரைடர்ஸ் படத்தை தயாரிப்பு நிறுவனமான எ & எச்.எஸ் புரொடக்ஷன்ஸ் என்ற பேனரின் கீழ் தயாரிப்பாளர்கள் அப்பாஸ் திருநாவயா, சஜின் அலி மற்றும் திபன் படேல் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.




நடிகர் மேத்யூ தாமஸ் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
தமிழில் நடிகர் மேத்யூ தாமஸ் அறிமுகம் ஆன படம்:
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் லியோ. இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் மேத்யூ தாமஸ் இவர்களின் மகனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக படத்தில் இவர் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்து நடிகர் மேத்யூ தாமஸை பார்க்கும் போது அவர் விஜய் சிறு வயதில் டீன் ஏஜில் இருப்பது போல இருக்கிறார் என்று கருத்து நிலவி வந்தது. இந்த நிலையில் படத்தில் விஜயின் மகனாவே நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகர் மேத்யூ தாமஸ்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இயக்குநரும் நடிகருமான தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடிகர் மேத்யூ தாமஸ் இரண்டாவது ஹீரோவாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடித்த நாயகன் நாயகியின் கதாப்பாத்திரத்தை விட மேத்யூ தமஸின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.