தக் லைஃப் படம் தோல்வியை சந்தித்ததற்கு இதுதான் காரணம் – நடிகர் மன்சூர் அலிகான் சொன்ன விசயம்
Actor Mansoor Alikhan: கோலிவுட் சினிமாவில் வில்லன் நடிகராக ரசிகர்களை மிரட்டியவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான தக் லைஃப் படத்தின் தோல்விக்கு காரணம் இதுதன் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் 90களில் பிறந்தவர்களுக்கு திரையில் ஒருத்தரை பார்த்தாலே பயமாக இருக்கும் என்றால் அது மன்சூர் அலிகானைதான் (Actor Mansoor Alikhan). அந்த அளவிற்கு அவர் வில்லனாக மிரட்டி இருப்பார். அவரது உடல் மொழி பார்வையாளர்களை கதிகலங்க செய்யும் அளவிற்கு இருக்கும். சமீப காலமாக இவரது படங்கள் மட்டும் இன்றி இவர் கொடுக்கும் பேட்டிகளும், இவர் வெளியிடும் வீடியோக்களும் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam) இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் நாயகன்களாக நடித்த தக் லைஃப் படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து வீடியோ ஒன்றை நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.
தக் லைஃப் படம் பார்க்கல… ஆனால் அதன் தோல்விக்கு இதுதான் காரணம்:
அந்த வீடியோவில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது, ”இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களில் ஒரு இறை அருள் எப்போதும் இருக்கும். நான் அவ்வளவு பெரிய பக்திமான் கிடையாது. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் நல்ல பக்திமான். அப்படி ஆஸ்கர் வென்ற ஏ.ஆர்.ரகுமான், எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு என்று என்ற பாடலில் இருந்துதான் எல்லா புகழும் ஒருவன் ஒருவருனுக்கே என்ற பாடல் வந்தாது.




அப்படி ஏ.ஆர்.ரகுமானின் எல்லா பாடல்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கும். பல வேலைகளில் அவர் இசையமைக்கும் படங்களில் நடிக்கவில்லை என்றெல்லாம் நான் வருத்தப்படுவது உண்டு. மேலும் இப்போ வந்த தக் லைஃப் படத்தை நான் இன்னும் பார்க்கல. ஆனால் அந்தப் படத்திலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வந்த பாடலில் அந்த சந்தம் இருக்கும்.
அது என்ன என்றால், லா இலாஹா இல்லல்லாஹுவில் இன்பம் கொள் நெஞ்சமே தூய கலிமா அதனை தினமும் ஓதுவாய் நெஞ்சமே என்ற பாடலைப் போல தான் காலை கனவினில் கண்விழித்தேன் என்ற பாடல் உள்ளது. இந்தப் பாடல் தக் லைஃப் படத்தில் இடம் பெறவில்லை. இது படத்தில் இடம் பெற்றிருந்தால் நிச்சயமாக படம் வெற்றிப்பெற்று இருக்கும் என்றும் மன்சூர் அலிகான் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகானின் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
தக் லைஃப் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான்:
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகும் பாடல்கள் எப்போதுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். அந்த வகையில் தக் லைஃப் படத்திற்கு முதலில் 5 பாடலகள் மட்டுமே வேண்டும் என்று நினைத்து கடைசியில் 9 பாட்டுகள் உருவானது என்று மணிரத்னம் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்தப் படத்தில் நிச்சயமாக முத்த மழை பாடல் இடம் பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிச்சமாக இருந்தது. அந்தப் பாடல் படத்தில் இடம்பெறவில்லை.