Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

என் வாழ்க்கையை படமாக்கினால் அதற்கு என்ன பெயர் வைப்பேன் தெரியுமா? சாய் பல்லவி சுவாரஸ்ய பேச்சு

Actress Sai Pallavi: மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிகப் படங்களை நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையை படம் ஆக்கினால் அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

என் வாழ்க்கையை படமாக்கினால் அதற்கு என்ன பெயர் வைப்பேன் தெரியுமா? சாய் பல்லவி சுவாரஸ்ய பேச்சு
சாய் பல்லவிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Jun 2025 12:47 PM

நடிகை சாய் பல்லவி (Actress Sai Pallavi) மலையாள சினிமாவில் தான் முதன் முறையாக நாயகியாக அறிமுகம் ஆனார். மலையாளத்தில் இவர் அறிமுகம் ஆகி இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். குறிப்பாக தெலுங்கு சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்துள்ளார் நடிகை சாய் பல்லவி. தற்போது இந்தி சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். அதன்படி நடிகர் ரன்பீர் கபூர் (Actor Ranbir Kapoor) நாயகனாக நடிக்கும் ராமாயணா படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது இணையத்தில் புகைப்படங்கள் கசிந்து தொடர்ந்து ரசிகர்களிடையே வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை சாய் பல்லவியின் சுவாரஸ்ய பேச்சு:

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை சாய் பல்லவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவரிடம் உங்களது வாழ்க்கையை படமாக எடுத்தால் அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சாய் பல்லவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை சாய் பல்லவி எனது வாழ்க்கையை படமாக எடுத்தான் ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் சாய் பல்லவி என்று பெயர் வைக்கலாம்.

ஏன் என்றால் நாம் அனைவரும் நம்மை சுற்றி உள்ளா அனைவரிடமும் ஒரே மாதிரியாக பழகுவது இல்லை. நானும் அப்படித்தான், என் நண்பர்களிடம் ஒரு மாதியும், எனது பெற்றோர்களிடம் ஒரு மாதிரியும், எனது உறவினர்களுடன் வேறு மாதிரியும் பழகுவேன். இப்படி எனக்கும் நிறைய முகங்கள் இருக்கிறது. அதனால் தான் இந்தப் பெயரை வைப்பேன் என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

நடிகை சாய் பல்லவியின் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai)

நடிகை சாய் பல்லவி நடிப்பில் இறுதியாக சூப்பர் ஹிட் அடித்தப் படங்கள்:

நடிகை சாய் பல்லவி தமிழில் இறுதியாக நடித்தப் படம் அமரன். இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்த நிலையில் படத்தில் நாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெலுங்கு சினிமாவில் நடிகை சாய் பல்லவி நடிப்பில் இறுதியாக வெளியான படம் தண்டேல். இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் நாக சைத்தன்யா நாயகனாக நடித்து இருந்தார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.