Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரவி மோகனின் ப்ரோ கோட் படத்தில் இத்தனை ஹீரோயின்களா? வைரலாகும் தகவல்

Actor Ravi Mohan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் தற்போது படங்கள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றது. இந்த நிலையில் தற்போது புதிதகா தொடங்கியுள்ள ப்ரோ கோட் படத்தில் ரவி மோகனுடன் நடிக்க உள்ள நாயகிகளின் எண்ணிக்கை இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரவி மோகனின் ப்ரோ கோட் படத்தில் இத்தனை ஹீரோயின்களா? வைரலாகும் தகவல்
ரவி மோகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Jun 2025 18:49 PM

நடிகர் ரவி மோகன் (Actor Ravi Mohan) நடிப்பில் இந்த ஆண்டு படங்கள் வரிசைக் கட்டி காத்திருக்கின்றது. அவந்த வரிசையில் சமீபத்தில் இயக்குநர் கார்த்திக் யோகியுடன் (Director Karthik Yogi) கூட்டணி வைப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இவர் முன்னதாக சந்தானம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த டிக்கிலோனா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தை நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இது இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகனுடன் இணைந்து பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ள இந்தப் படத்திற்கு ப்ரோ கோட் என்று பெயர் வைத்துள்ளனர்.

படத்தின் அப்டேட்கள் அடுத்து அடுத்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தில் நடிக்க உள்ள நடிகைகள் குறித்த அப்டேட் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் ரவி மோகனின் ப்ரோ கோட் படத்தில் 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் கார்த்திக் யோகி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

நடிகர் ரவி மோகனின் நடிப்பில் வரிசைக் கட்டி காத்திருக்கும் படங்கள்:

நடிகர் ரவி மோகன் நடிப்பில் இறுதியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காதலிக்க நேரமில்லை படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகன் நடித்துள்ள படம் கராத்தே பாபு. இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் அரசியல்வாதியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜீனி. ஃபேண்டசி காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் வித்யாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு இடையில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தி நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் பராசக்தி படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.