OTT Movies: ஆக்ஸிஜன் குறையும் அறையில் சிக்கும் பெண்.. ஓடிடியில் பார்க்க வேண்டிய படம்!
Best Movies in OTT: மெலனி லாரண்ட் நடிப்பில், கிரையோஜெனிக் அறையில் சிக்கிய ஒரு பெண்ணின் போராட்டத்தைக் காட்டும் படமாக ஆக்ஸிஜன் அமைந்துள்ளது. நினைவாற்றல் இழந்த அப்பெண், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தனது நினைவுகளை மீட்டு, தப்பிக்கப் போராடுகிறாள். படத்தின் சுவாரஸ்யமான கதை ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.

பொதுவாக நம் கற்பனைக்கு எட்டாத கதைகள் திரைப்படங்களாக உருவாகும்போது அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பதற்கு உதாரணமாக பல்வேறு படங்களை சுட்டிக்காட்டலாம். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு வெளியான சயின்ஸ் ஃபிக்ஷன் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான (Science Fiction Psychological Thriller) Oxygen (2021) பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். பிரெஞ்சு மொழி உருவான இப்படத்தை கிறிஸ்டி லெப்லாங்க் கதை எழுதிய நிலையில் அலெக்ஸாண்ட்ரே அஜா இயக்கியிருந்தார். இப்படத்தில் பெரிய அளவில் கேரக்டர்கள் இருக்காது. மெலனி லாரன்ட்,மாத்தியூ அமல்ரிக்,மாலிக் ஜிடிஆகியோர் மட்டுமே மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.மாக்சிம் அலெக்ஸாண்ட்ரே ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு ராப் இசையமைத்திருந்தார். இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
படத்தின் கதை
Mélanie Laurent stars in Oxygen, a thrilling new film from director Alexandre Aja pic.twitter.com/OAANlFi102
— Netflix (@netflix) March 10, 2021
காற்று புகாத மருத்துவ கிரையோஜெனிக் அறைக்குள் ஒரு பெண் சிக்கியிருக்கிறார். அவர் எப்படி அங்கு வந்தார் என்பது தெரியவில்லை. நினைவாற்றல் இழப்பால் அவதிப்பட்டு வரும் நிலையில் முதலில் தான் எங்கு இருக்கிறோம் என தெரியாமல் முழிக்கும் அப்பெண் ஒரு கட்டத்தில் கிரையோஜெனிக் அறைக்குள் சிக்கியிருப்பதையும், அங்கு ஆக்ஸிஜன் அளவு வேகமாகக் குறைந்து வருவதையும் கண்டுபிடிக்கிறார். இருந்தாலும் தான் எப்படி அங்கு வந்தோம் என்பது நினைவில் இல்லை.




இதற்கிடையில் மருத்துவ இடைமுக தொடர்பு அதிகாரி மைலோ என்படும் செயற்கை நுண்ணறிவு உதவி அப்பெண்ணுக்கு கிடைக்கிறது. ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அந்த அறையை திறக்க ஏஐ மறுக்கிறது. அதேசமயம் அப்பெண்ணால் வாய்ஸ் மெசெஜ், அவசர தொடர்புகளை மேற்கொள்ள முடியும். அப்படி செய்து கிரையோஜெனிக் அறை சீரியல் எண்ணை கொடுத்தால் அது 3 ஆண்டுகளுக்கு முன் அழிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தனக்கு என்ன நடந்தது என தேட தொடங்குகிறார். இதன்மூலம் அப்பெண் தன்னுடைய கடந்த காலம் பற்றி நினைவில் கொண்டு எப்படி தப்பிக்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.
இதில் கிரையோஜெனிக் அறைக்குள் மாட்டிய பெண்ணாக மெலனி லாரன்ட் மற்றும் உதவி செய்யும் ஏஐ மைலோவாக மாத்தியூ அமல்ரிக் நடித்திருந்தனர்.
படத்தின் சிறப்புகள்
முதலில் இந்த படத்துக்கு O2 என பெயரிடப்பட்டது. ஆனால் 2020ல் தொடங்கிய ஷூட்டிங்கில் ஏற்பட்ட ஏகப்பட்ட நடிகர் மாற்றம் தொடங்கி படத்தின் தலைப்பும் கடைசியாக ஆக்ஸிஜன் என மாற்றம் பெற்றது. ஜூலை 2020ல் தொடங்கிய ஷூட்டிங் 2021 பிப்ரவரியில் முடிவடைந்தது. கிட்டதட்ட ஒன்றரை மணி நேரமும் திக் திக் நிமிடங்களாக செல்லும் இப்படத்தின் திரைக்கதை மட்டுமல்லாமல் படமும் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. 2021ஆம் ஆண்டு மே மாதத்தில் கொரோனா தொற்றின்போது இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இப்படம் கட்டாயம் பார்க்க வேண்டிய த்ரில்லர் படங்களில் ஒன்றாகவும் ரசிகர்களால் குறிப்பிடப்பட்டது.