AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

OTT Movies: மொத்தமே 90 நிமிடம் தான்.. த்ரில்லான கதை.. இந்த படம் பாருங்க!

2021 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க க்ரைம் திரில்லர் படம் "தி கில்டி" பற்றிய இங்கு பார்க்கலாம். ஜேக் கில்லென்ஹால் நடித்த இந்தப் படம், 91 நாடுகளில் நெட்ஃபிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட படமாகும். ரீமேக் படமாக இருந்தாலும், அசல் படத்திலிருந்து சில வேறுபாடுகளுடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

OTT Movies: மொத்தமே 90 நிமிடம் தான்.. த்ரில்லான கதை.. இந்த படம் பாருங்க!
The Guilty படம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 07 Jun 2025 09:30 AM IST

பொதுவாக க்ரைம் திரில்லர் படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.எந்த மொழியில் படம் இருந்தாலும் சரி சப் டைட்டில் வைத்தாவது அதனைப் பார்த்து திரைக்கதையை வியந்து பாராட்டும் வழக்கம் உலக சினிமா ரசிகர்களிடையே உள்ளது. இப்படியான நிலையில் 2021 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான அமெரிக்க க்ரைம் திரில்லர் படமான The Guilty பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். 2018 ஆம் ஆண்டு டேனிஷ் மொழியில் The Guilty என்ற பெயரில் வெளியான இந்த படத்தின் ரீமேக் தான் 2021ல் ஆங்கிலத்தில் வெளியானது. இப்படத்தில் ஜேக் கில்லென்ஹால், கிறிஸ்டினா விடல், ஈதன் ஹாக் , ரிலே கியோஃப் , எலி கோரி , டா’வைன் ஜாய் ராண்டால்ஃப் , பால் டானோ மற்றும் பீட்டர் சர்ஸ்கார்ட் ஆகியோர் நடித்திருக்கின்றனர். அன்டோயின் ஃபுகுவா இயக்கிய இப்படத்திற்கு மஸ் மக்கானி ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தின் கதை மற்றும் சிறப்புகளை காணலாம்.

படத்தின் கதை 


நீதிமன்ற விசாரணைக்காகக் காத்திருக்கும் ஜேக் கில்லென்ஹாலிடம் இருந்து கதை தொடங்குகிறது. சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு அவர் பணியில் இருந்தபோது ஒரு சம்பவம் நடக்கிறது. அதற்கான சிக்கலில் சிக்கிய LAPD அதிகாரி ஜேக் கில்லென்ஹால் அவசர கால உதவிகளை கோரும் கால் சென்டரில் இரவுப் பணியில் இருக்கிறார். அப்போது ஒருநாள் ரிலே கீஃப் அழைப்பிற்கு பதிலளிக்கிறார். தான் கடத்தப்படுவதாக தெரிவிக்கிறாள். மேலும் தகவல்கள் கிடைப்பதற்கு இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இதனையடுத்து ரிலே கீஃப் வீட்டுக்கு போன் செய்து விவரத்தை கேட்கும்போது அம்மா, அப்பாவுடன் சென்றதாக அவள் மகள் கூறுகிறார்.

உடனே ஜேக் கில்லென்ஹால் தன்னுடைய சக காவல்துறை அதிகாரிகளிடம் நடந்ததை சொல்லி விசாரணை நடத்த சொல்கிறான். ஆனால் உன் மீதான சட்டப்பிரச்னைக்கு நடுவே இது தேவையில்லாத வேலை என சொல்லி அவனது வேண்டுகோளை நிராகரிக்கிறார்கள். இதன்பின்னர் என்ன நடந்தது?, கடத்தப்பட்ட ரிலே கீஃப் மீட்கப்பட்டாரா என்பதே இப்படத்தின் கதையாகும்.

படத்தின் சிறப்புகள் 

இந்த படமானது 2021 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. இந்த படத்தை நாம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம். கிட்டதட்ட 91 நாடுகளில் அதிகம் பேர் பார்த்த படம் என்ற சிறப்பை பெற்றது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் ரீமேக் அசல் படத்தை விட சற்று திரைக்கதையில் சொதப்பியதாகவும் விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இப்படம் நிச்சயம் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றும். வாய்ப்பிருந்தால் இந்த படம் பாருங்கள்.

Follow Us