OTT Movies: கேங்க்ஸ்டர் கதை.. 2 மணி நேரம் விறுவிறுப்பு.. இந்த படம் பாருங்க!
ஓடிடி தளங்களின் வருகையால், பல மொழிப் படங்களை நாம் இருக்கும் இடத்திலேயே பார்ப்பது மிகச்சிறந்த வரப்பிரசாதமாக அமைந்து விட்டது. அந்த வகையில் 2002ல் வெளிவந்த "ரோடு டு பெர்டிஷன்" படம் பற்றி நாம் காணலாம். இப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவற்றில் இது கிடைக்கிறது.

ஓடிடி தளங்கள் வந்து விட்ட பிறகு நம்மால் மற்ற மொழி படங்களையும், ரிலீசான சமயத்தில் பார்க்க முடியாமல் போன படங்களையும் பார்க்க முடியும் வசதி சினிமா ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படியான நிலையில் 2002 ஆம் ஆண்டு ஹாலிவுட் படமான Road to Perdition படம் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த படமானது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் காண கிடைக்கிறது. அதேசமயம் அமேசான் பிரைம் தளத்தில் பணம் செலுத்தி பார்க்கலாம். இந்த படத்தின் கதை மற்றும் அதை சுற்றிய சுவாரஸ்ய தகவல்களை நாம் காணலாம். முழுக்க முழுக்க ரசிகர்களை கவரும் வகையில் இப்படத்தின் கதையானது உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை டேவிட் செல்ஃப் இயக்கியிருந்தார். மேலும் டாம் ஹாங்க்ஸ், ஸ்டான்லி டூசி, பால் நியூமன்,ஜூட் லா, ஜெனிஃபர் ஜேசன் லீ உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கான்ராட் எல். ஹால் ஒளிப்பதிவு செய்த Road to Perdition படத்திற்கு தாமஸ் நியூமன் இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
Road to Perdition is a beautiful movie about how even the toughest gangsters follow a code. Or at least they did. Or at least they’re supposed to. It’s also a reminder that Paul Newman, even at 77, was one of film’s finest actors. Sam Mendes directed a masterpiece here. pic.twitter.com/iZ0wU0lz37
— Cinema Tweets (@CinemaTweets1) May 10, 2025
இல்லினாய்ஸின் ராக் தீவில் யாருமில்லாத ஹீரோவான டாம் ஹாங்க்ஸ் ஐரிஷ் கும்பல் தலைவனான பால் நியூமனால் வளர்க்கப்படுகிறார். தனது சொந்த குழந்தைகளை விட டாம் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார். பால் நியூமனின் கூட்டாளி ஃபின் மெக்கவர்ன் தனது சகோதரன் நினைவஞ்சலி நிகழ்ச்சியில், அவர் மரணத்திற்கு பால் நியூமன் தான் காரணம் என சொல்கிறார். இதனையடுத்து பால் நியூமனின் மூத்த மகன் தனது தந்தை மற்றும் டாமை ஃபின் மெக்கவர்னிடம் பேச்சுவார்த்தைக்கு அனுப்புகிறார். இந்த பேச்சுவார்த்தையில் பால் நியூமன் ஃபின் மெக்கவர்னை சுடுகிறார். டாம் மற்றவர்களை சுடுகிறார்.




இவை அனைத்தையும் டாமின் மூத்த மகன் மைக்கேல் பார்த்து விட, அதை ரகசியமாக வைக்க அறிவுறுத்துகிறான். இப்படியான நிலையில் டக் ஸ்பினுஸ்ஸாவிடம் வசூலிக்க வேண்டிய கடனை வாங்க பால் நியூமன் டாமை ஒரு கடிதத்துடன் அனுப்புகிறான். அதைப் படித்ததும் டக் ஸ்பினுஸ்ஸா டாமை தீர்த்து கட்ட முயல, டாம் அவர்களின் கதையை முடிக்கிறான்.
மேலும் அந்த கடிதத்தை படிக்கும்போது அதிர்ச்சி காத்திருக்கிறது. அதில் டாமை கொன்றால் கடன் தீர்ந்து விடும் என எழுதப்பட்டுள்ளது. இதனையடுத்து வீட்டுக்கு சென்று டாம் பார்க்கும்போது பால் நியூமன் தனது மனைவி மற்றும் இளைய மகனை கொன்றதை கண்டறிகிறார். இதன்பின்னர் பால் நியூமன் செயலுக்கு காரணம் என்ன என்பதை சுமார் 2 மணி நேர படமாக விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார்கள்.
படத்தின் சுவாரஸ்ய தகவல்கள்
அமெரிக்காவின் க்ரைம் நாவல்களை எழுதுவதில் புகழ்பெற்ற மேக்ஸ் ஆலன் காலின்ஸ் எழுதிய Road to Perdition என்ற நாவலை தழுவி தான் இந்த படம் எடுக்கப்பட்டது. ஸ்டீபர் ஃபீல்ட்பெர்க் தான் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் முடியாமல் போனது. இந்த படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்தது. மழை இப்படத்தின் கதையில் மிக முக்கிய பங்கு வகித்தது. வாய்ப்பிருந்தால் இந்த படங்களைப் பாருங்கள்.