AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த வாரம் தியேட்டரை விட ஓடிடிதான் மாஸ்… யார் படம் பார்க்க போறீங்க?

What To Whatch: தென்னிந்திய சினிமாவில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை விட ஓடிடியில் வெளியாகும் படங்களுக்குத்தான் ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் தெலுங்கு மலையாளம் என முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றது.

இந்த வாரம் தியேட்டரை விட ஓடிடிதான் மாஸ்… யார் படம் பார்க்க போறீங்க?
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 May 2025 23:26 PM IST

ரெட்ரோ: நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் கடந்த 1-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். இதில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், பிரகாஷ் ராஜ், நாசர், சுவாசிகா, சிங்கம் புலி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். அது மட்டும் இன்றி படத்டில் ஒரு பாடலுக்கு நடமும் ஆடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் சந்தோஷ் நாராயணன். படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அது மட்டும் இன்றி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. அதன்படி படம் நாளை 30-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

ஹிட் 3: நேச்சுரல் ஸ்டார் நானியின் நடிப்பில் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஹிட் 3. இந்தப் படத்தை இயக்குநர் சைலேஷ் கொலானு எழுதி இயக்கி இருந்தார். படத்தில் நடிகர் நானியின் ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து இருந்தார்.

இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராவ் ரமேஷ், சூரியா ஸ்ரீனிவாஸ், சமுத்ரகனி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது படம் ஒடிடியில் வெளியாகியுள்ளது. அதன்படி படம் இன்று 29-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

துடரும்: நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த 25-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானப் படம் துடரும். இந்தப் படத்தில் நடிகை சோபனா நாயகியாக நடித்துள்ளார். நடிகர்கள் மோகன்லால் மற்றும் சோபனா இருவரும் சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்ததை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

இயக்குநர் தருண் மூர்த்தி இந்த துடரும் படத்தை இயக்கியுள்ள நிலயில் இதில் மோகன்லால் உடன் இணைந்து நடிகர்கள் ஃபர்ஹான் பாசில், மணியன்பிள்ளை ராஜு, பினு பப்பு ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வசூலி படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியதை மிகவும் மகிழ்ச்சியுடன் நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் தள பக்கதில் பதிவிட்டு கொண்டாடி இருந்தார். இந்த நிலையில் படம் தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. அதன்படி படம் நாளை 30-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

Follow Us