மே 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ
Theatre Release Movies List: தமிழ் சினிமாவில் மே மாதம் தொடங்கியதில் இருந்தே பெரிய நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வாரம் வாரம் திரையரங்குகளில் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரம் சிறிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசைக் கட்டி காத்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

தி வெர்டிக்ட்: நடிகை வரலட்சுமி சரத்குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் தி வெர்டிக்ட். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் உடன் இணைந்து நடிகர்கள் ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் என பலர் நடித்துள்ளனர். ஒரு வெளி நாட்டில் நிறைய சொத்துகளை வைத்துள்ள சுஹாசினி கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை செய்தது யார் என்று பலர் மீது சந்தேகம் ஏற்படுகிறது. இந்த நிலையில் சுஹாசினி கூடையே இருந்த பெண் ஒருவரை சந்தேகித்து காவல்துறையினர் கைது செய்கின்றனர். அந்தப் பெண்ணிற்கு ஆதரவாக நடிகை வரலட்சுமி வழக்கறிஞராக வருகிறார். இறுதியில் அந்தப் பெண் கொலை செய்தாளா இல்லையா என்பதே படத்தின் க்ளைமேக்ஸாக இருக்கப் போகிறது.
இந்த தி வெர்டிக்ட் படத்தை தயாரிப்பாளர்கள் பிரகாஷ் மோகன்தாஸ் மற்றும் என்.கோபி கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த நிலையில் படம் நாளை மே மாதம் 30-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மனிதர்கள்: அறிமுக இயக்குநர் இந்திரா இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் மனிதர்கள். ஓர் இரவில் நடக்கும் கொலையை சுற்றி இந்தப் படத்தின் ட்ரெய்லர் நகர்கிறது. முழுக்க முழுக்க இரவில் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது இந்த மனிதன் படம். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பெண்களே இல்லாம முழுக்க முழுக்க ஆண்களை மட்டுமே வைத்து எடுத்துள்ளனர்.
நடிகர்கள் கபிலர் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் எம் கே ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். புதுமுகங்களை கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் ராஜேந்திர பிரசாத், ஜே நவீன் குமார், சாம்பசிவம் எம் கே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படம் நாளை மே மாதம் 30-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ராஜபுத்திரன்: நடிகர் பிரபு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ராஜபுத்திரன். இந்தப் படத்தில் நடிகர் வெற்றி நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கிருஷ்ண பிரியா, மன்சூர் அலிகான், ஆர்.வி. உதயகுமார், தங்கதுரை, இம்மான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், கோமல் குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை இயக்குநர் மகா கந்தன் எழுதி இயக்கி உள்ளார். கிராமத்து பின்னணியில் நகைச்சுவை மற்றும் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை கே.எம்.சஃபி தயாரித்துள்ளார். படம் நாளை மே மாதம் 30-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.