Rajinikanth : நீண்ட நாள் காத்திருப்பு.. ரஜினிகாந்த்தின் ‘லால் சலாம்’ பட ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
Lal Salaam OTT Release Update : கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் அவரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், கடந்த 2024ம் ஆண்டு வெளியான படம் லால் சலாம். வெளியாகி 1 வருடத்திற்கு மேலான நிலையில், தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) மகளும், சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (Aishwarya Rajinikanth). இவரின் இயக்கத்தில் இதுவரை 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து, இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய திரைப்படம் லால் சலாம் ( Lal Salaam). இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதைகளுடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் கதையை விஷ்ணு ரங்கசாமியுடன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் இணைந்து எழுதியுள்ளனர். இந்த படத்தின் முதல் அறிவிப்புகள் கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த படமானது சுமார் 1 வருட காலமாக உருவாகிவந்தது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், (Vishnu Vishal, Vikranth) செந்தில், ஜீவிதா, கேஎஸ். ரவிக்குமார் என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கிரிக்கெட் தொடர்பாக உருவாகியிருந்தது.
கடந்த 2024ம் ஆண்டு , பிப்ரவரி 9ம் தேதியில் இந்த லால் சலாம் படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்படப் பல மொழிகளில் வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியாக்குவதற்கு முன்னே பல சர்ச்சைகளை சந்தித்தது. இதைத் தொடர்ந்து திரையரங்கில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அந்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை.
மேலும் இந்த படமானது வெளியாகி 1 வருடத்தைக் கடந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி ரஜினியின் இந்த லால் சலாம் படமானது வரு 2025, ஜூன் 6ம் தேதியில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
சன்நெக்ஸ்ட் வெளியிட்ட எக்ஸ் தள அறிவிப்பு :
Stay tuned & Guess who’s firing up the screen this Bakrid? 😎#SunNXTPremiere #SunNXTBakrid #SunNXT pic.twitter.com/ZHkCjzfEVf
— SUN NXT (@sunnxt) May 30, 2025
லால் சலாம் திரைப்பட தோல்வி :
நடிகர் ரஜினியின் மகள், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் இயக்கத்தில் வெளியான இந்த படமானது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2022ம் ஆண்டே வெளியான நிலையில், அதை தொடர்ந்து சுமார் 1 வருடத்திற்கும் மேலாக இந்த படமானது உருவாகிவந்தது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த்தும் இணைந்து நடித்திருந்தனர். கிரிக்கெட் தொடர்பாக இந்த படத்தின் கதை அமைந்திருந்தது.
சுமார் ரூ. 90 கோடி பட்ஜெட்டில் வெளியான இந்த படமானது, வேறு ரூ. 19 கோடி மட்டும்தான் வசூல் செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. ரஜினியின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு இரு படங்கள் வெளியான நிலையில், வேட்டையன் படத்தை ஒப்பிடும்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படுதோல்வி அடைந்தது என்பது தெளிவிவாக தெரியும்.
இந்நிலையில், தோல்வியைத் தொடர்ந்து இப்படம் ஓடிடியில் வெளியாகாமலிருந்த நிலையில்,ரிலீஸ் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 2025, ஜூன் 6ம் தேதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.