Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rajinikanth : ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ‘கேங்ஸ்டர்’ கதையில் நடிக்கிறாரா ரஜினிகாந்த்?

Rajinikanth New Movie : நடிகர் ரஜினியின் முன்னணி நடிப்பில் வேட்டையன் படத்தைத் தொடர்ந்து உருவாகிவரும் படங்கள் கூலி மற்றும் ஜெயிலர் 2. இதில் கூலி படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ரஜினி இந்த படத்தைத் தொடர்ந்து தெலுங்கு பட இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில், கேங்ஸ்டர் கதைக்களத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Rajinikanth : ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ‘கேங்ஸ்டர்’ கதையில் நடிக்கிறாரா ரஜினிகாந்த்?
ரஜினிகாந்த்
Barath Murugan
Barath Murugan | Updated On: 30 May 2025 11:25 AM

கோலிவுட்  இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) நடித்துள்ள திரைப்படம்தான் கூலி (Coolie) . இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் அதிரடி திருப்பங்களுடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினிங்கத்துடன் நடிகர்கள் நாகார்ஜுனா (Nagarjuna), உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்து வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் , நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில் ஜெயிலர் 2 (Jailer 2)படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர்  படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தெலுங்கு இளம் இயக்குநர் ஒருவரின் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த இயக்குநர் வேறு யாருமில்லை, நடிகர் நானியின் சரிபோதா சனிவாரம் என்ற படத்தை இயக்கிய, இயக்குநர் விவேக் ஆத்ரேயாதான் (Vivek Athreya). இவரின் இயக்கத்தில்தான் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் :

தெலுங்கு இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் படத்தில், நடிகர் ரஜினி மும்பை கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தைப் பற்றி நடிகர் ரஜினியிடம் இயக்குநர் விவேக் ஆத்ரேயா பேசியுள்ளதாகவும், இந்த படத்தை குட் பேட் அக்லி படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி படக்குழு வெளியிட்ட வீடியோ :

நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த கூலி படமானது அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இந்த படத்தில் அதிரடி பாடல்கள் உருவாகியுள்ளது .

மேலும் நடிகை பூஜா ஹெக்டேவும் இந்த படத்தில் சிறப்பு நடனமாடியுள்ளார். கூலி படமானது ரிலீசாகி இன்னும் சில மாதங்கள் மட்டும் உள்ள நிலையில், இப்படத்தின் அப்டேட்டுகளும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.