Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.4,640 சரிந்தது!

Gold and silver price drops sharply: 2026ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே, ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து அதிரடி காட்டி வருகிறது. நடுத்தர மக்களின் சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது சாமானிய மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.4,640 சரிந்தது!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 05 Feb 2026 10:30 AM IST

சென்னை, பிப்ரவரி 05: நேற்றைய தினம் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.4,640 சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,14,560க்கும், 1 கிராம் ரூ.14,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 2026ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே, ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து அதிரடி காட்டி வருகிறது. நடுத்தர மக்களின் சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது சாமானிய மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயரும் பிஎஃப் உச்ச வரம்பு?.. வெளியான முக்கிய தகவல்!

வரலாற்று உச்சம் தொட்ட தங்கம் விலை:

இதுவரை வரலாற்றில் இல்லாத உட்சமாக தங்கம் விலை கடந்த ஜனவரி 29ம் தேதி ஒரு கிராம் ரூ.16,800க்கும், ஒரு சவரன் ரூ.1,34,400க்கும் விற்பனையாகி விலை புதிய உச்சத்தை எட்டியது. இதனால், நடுத்தர வர்க்க மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகவே மாறியது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு சிறுக சிறுக தங்கத்தை சேகரிக்க விரும்பிய மக்கள் இதனால் பெரும் கலக்கமடைந்தனர்.

இன்று தங்கம், வெள்ளி விலை சரிவு:

இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, சென்னையில் கிராமுக்கு ரூ.580 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,320க்கும், சவரனுக்கு ரூ.4,640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,560க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல், தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்திற்கும் விற்பனையாகி வருகிறது.

இதையும் படிக்க: பட்ஜெட் 2026 : நிர்மலா சீதாராமன் அறிவித்த டாப் 10 அறிவிப்புகள் இவைதான்!

ஏற்ற, இறக்கத்துடன் தங்கம் விலை:

சர்வதேச சந்தை நிலவரம், உலக அளவிலான தங்கத்தின் தேவை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிகரித்து வருவது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.90.45 ஆக உள்ளது. மேலும் டாலர் மீது ஐரோப்பிய நாடுகள் வைத்திருந்த நம்பிக்கை இழந்துள்ளதும் இதன் காரணமாக மத்திய வங்கிகள் தங்களிடம் இருந்த டாலரை விற்றுவிட்டு தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. இதனையடுத்து தான் தங்கத்தின் மதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.