AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெளிநாடுகளில் இருந்து தங்கம் எடுத்து வருவதற்கான விதிகளில் மாற்றம்.. பிப்ரவரி 2 முதல் அமல்!

How Much Gold Can Be Brought From Abroad | வெளிநாடுகளில் இருந்து இந்ஹிய்தியாவுக்கு தங்கத்தை கொண்டு வருவதற்கு சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிகள் உள்ளன. இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கத்தை கொண்டுவருவதற்கான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தங்கம் எடுத்து வருவதற்கான விதிகளில் மாற்றம்.. பிப்ரவரி 2 முதல் அமல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 Feb 2026 13:19 PM IST

தங்கம் (Gold) உலக அளவில் அதிகம் நுகரப்படும் உலோகமாக உள்ளது. தங்கத்தின் தேவை மற்றும் நுகர்வு அதிகரித்து வரும் நிலையில், அதன் விலையும் மிக கடுமையான உயர்ந்து வருகிறது. இவ்வாறு தங்கம் உச்சத்தில் உள்ள நிலையில், இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சில நாடுகளில் தங்கம் சற்று குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் ஏராளமான் பொதுமக்கள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் வாங்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து தங்கம் வாங்கி வருவதற்கு சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிகள் உள்ள நிலையில், தற்போது அதில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து தங்கம் எடுத்து வருவதற்கான விதிகளில் மாற்றம்

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் எடுத்து வரும் மக்கள் சுங்க வரி செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் நபர்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் எடுத்து வந்தால் இந்த சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும். முன்னதாக ரூ.50 ஆயிரம் வரையிலான மதிப்பு கொண்ட தங்கத்தை எந்த வித சுங்க கட்டணமும் செலுத்தாமல் இந்தியாவுக்கு கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், இதில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது இனி வெளிநாடுகளில் இருந்து ரூ.75 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் பிப்ரவரி 02, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க : வரி குறைத்த அமெரிக்கா.. பங்குச் சந்தைகள் பெரும் லாபத்துடன் உயர்வு

புதிய விதிகள் கூறுவது என்ன?

புதிய விதிகளின்படி இந்தியாவில் வசிப்பவர்கள் அல்லது இந்திய சுற்றுலா பயணிகள் அல்லது சுற்றுலா விசா இல்லாத பிற விசாக்களில் வரும் வெளிநாட்டவர்கள் ரூ.75 ஆயிரம் மதிப்பு கொண்ட தங்கத்தை சுங்க கட்டணம் இன்றி எடுத்துவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணி என்றால் சுமார் ரூ.25 மதிப்பிலான தங்கத்தை சுங்க கட்டணம் இன்றி எடுத்து வரலாம்.

இதையும் படிங்க : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி.. குறைந்த வரி லிஸ்டில் இந்தியா

இந்திய குடிமக்களாக இருந்து வெளிநாட்டில் ஒரு ஆண்டுக்கும் மேல் வசிக்கும் பெண்ணாக இருந்தால் அந்த நபர் 40 கிராம் வரை தங்கத்தை வரி இல்லாமல் இந்தியாவுக்கு கொண்டு வரலாம். இதுவே ஆணாக இருந்தால் 20 கிராம் தங்கம் வரை எடுத்து வரலாம். அவர்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us