AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026: வீரர் முதல் பிராண்ட் தூதர் வரை.. டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா கடந்து வந்த பாதை!

Rohit Sharma 2026 WC Ambassador: இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா மிகப்பெரிய சாம்பியனாக பார்க்கப்படுகிறது. 2024 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்திருந்தாலும், அவர் படைத்த சாதனை மறக்கமுடியாதது. ரோஹித் சர்மா கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி தனது அறிமுக போட்டியிலேயே முதல் அரைசதத்தை அடித்தபோது அவருக்கு வயது வெறும் 20.

T20 World Cup 2026: வீரர் முதல் பிராண்ட் தூதர் வரை.. டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா கடந்து வந்த பாதை!
ரோஹித் சர்மா டி20 உலகக் கோப்பை பயணம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Feb 2026 10:00 AM IST

கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி, 17 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம், நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ரோஹித் சர்மா 2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார். 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றதை தொடர்ந்து, 11 ஆண்டுகால ஐசிசி வறட்சி முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டின் சாம்பியன்:

இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா மிகப்பெரிய சாம்பியனாக பார்க்கப்படுகிறது. 2024 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்திருந்தாலும், அவர் படைத்த சாதனை மறக்கமுடியாதது. ரோஹித் சர்மா கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி தனது அறிமுக போட்டியிலேயே முதல் அரைசதத்தை அடித்தபோது அவருக்கு வயது வெறும் 20.

2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் தொடக்க டி20 போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை கட்டாயம் வெல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ரோஹித் நடுவில் பேட்டிங் செய்ய வந்தபோது இந்தியா 4 விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்திருந்தது. வீரேந்தர் சேவாக் மற்றும் கவுதம் கம்பீர் போன்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறிய இடத்தில், ரோஹித் தென்னாப்பிரிக்க பந்துவீச்சு வரிசையை அடித்து நொறுக்கி, தனது முதல் சர்வதேச அரைசதத்தை பதிவு செய்தார். ஒட்டுமொத்தமாக அந்த டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா, ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்தார். இதில் சூப்பர் 8 கட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் ரோஹித் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்தார்.

2024 டி20 உலகக் கோப்பையில் அசத்தல்:

2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 156.70 ஸ்ட்ரைக் ரேட்டில் 257 ரன்கள் குவித்தார். குறிப்பாக, சூப்பர் 8 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 41 பந்துகளில் 92 ரன்களும், அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 39 பந்துகளில் 57 ரன்களும் எடுத்தது, இந்தியாவின் சாம்பியன் பட்டத்தை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தது.

பிராண்ட் தூதராக ரோஹித் சர்மா:

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)


2026 டி20 உலகக் கோப்பைக்கான பிராண்ட் தூதராக அறிவிக்கப்பட்டபோது பேசிய ரோஹித் சர்மா, “இந்தியாவிற்கு போட்டி மீண்டும் வருவதையும், நான் மீண்டும் அதனுடன் இணைந்திருப்பதையும் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த முறை, நான் ஒரு புதிய பிராண்ட் தூதராக இணைகிறேன். அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள், அவர்கள் மறக்கமுடியாத நேரத்தை அனுபவிப்பார்கள், இந்தியாவின் விருந்தோம்பலை விரும்புவார்கள், பல நினைவுகளை வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Follow Us