Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026: அதிரடியாக தொடங்கும் டி20 உலகக் கோப்பை.. இந்திய அணி எப்போது, யாருடன் மோதுகிறது?

2026 ICC T20 World Cup India Full Schedule: 2026 டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டி வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி கொழும்பில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும். 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன. இதே குழுவில் நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளும் ஒரே குழுவில் உள்ளன.

T20 World Cup 2026: அதிரடியாக தொடங்கும் டி20 உலகக் கோப்பை.. இந்திய அணி எப்போது, யாருடன் மோதுகிறது?
இந்திய கிரிக்கெட் அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Feb 2026 10:00 AM IST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026க்கான (2026 T20 World Cup) அட்டவணையை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதன்படி, 2026 டி20 உலகக் கோப்பை வருகின்ற 2026 பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி, இறுதிப் போட்டி வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி அகமதாபாத் அல்லது கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், இறுதிப்போட்டி கொழும்பில் நடைபெறும். அதேநேரத்தில், வேறு எந்த அணியாவது இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றால் அகமதாபாத்தில் நடைபெறும். இந்த முறை டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்தநிலையில், 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி (Indian Cricket Team) எப்போது யாருடன் எங்கு விளையாடுகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

2024ம் ஆண்டு முன்னதாக, டி20 உலகக் கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. 2024ம் ஆண்டு அட்டவணையை போலவே, இந்த 2026 டி20 உலகக் கோப்பையிலும் இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 55 போட்டிகள் நடைபெறவுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் டெல்லி, அகமதாபாத், மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவிலும், இலங்கையில், கொழும்பு மற்றும் கண்டி என மொத்தம் 8 நகரங்களில் நடைபெறுகிறது.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் மிகவும் வெற்றிக்கரமான கேப்டன் யார்? முதலிடத்தை மிஸ் செய்த தோனி, ரோஹித்!

முதல் போட்டியில் எந்த அணிகள் மோதுகிறது..?


2026 டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டி வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி கொழும்பில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும். 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன. இதே குழுவில் நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளும் ஒரே குழுவில் உள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையிலான முதல் போட்டி வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும்.

டி20 உலகக் கோப்பை 2026ல் இந்திய அணியின் அட்டவணை:

  • இந்தியா vs அமெரிக்கா – 2026 பிப்ரவரி 7, மும்பை
  • இந்தியா vs நமீபியா – 2026 பிப்ரவரி 12, டெல்லி
  • இந்தியா vs பாகிஸ்தான் – 2026 பிப்ரவரி 15 – கொழும்பு
  • இந்தியா vs நெதர்லாந்து – 2026 பிப்ரவரி 18 – அகமதாபாத்

அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி எப்போது..?

2026 டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப்போட்டி வருகின்ற 2026 மார்ச் 4ம் தேதி கொல்கத்தா அல்லது கொழும்பு ஸ்டேடியத்தில் நடைபெறும். அதேநேரத்தில், 2வது அரையிறுதிப்போட்டி வருகின்ற 2026 மார்ச் 5ம் தேதி மும்பையில் நடைபெறும்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் 2026 டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி வருகின்ற மார்ச் 8ம் தேதி அகமதாபாத் அல்லது கொழும்பில் நடைபெறும்.