T20 World Cup: டி20 உலகக் கோப்பையில் மிகவும் வெற்றிக்கரமான கேப்டன் யார்? முதலிடத்தை மிஸ் செய்த தோனி, ரோஹித்!
Legendary Captains in T20 World Cup: 2009ம் ஆண்டு இரண்டாவது டி20 உலகக் கோப்பை நடைபெற்றது. இதில், யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது. 2010ம் ஆண்டு பால் கோலிங்வுட் தலைமையில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக் கோப்பை பட்டத்தை கைப்பற்றியது.
2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) வருகின்ற 2026 பிப்ரவரி 7ம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கை மண்ணில் ஹைபிரிட் மாடலில் நடைபெறவுள்ளது. கடைசியாக நடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) தென்னாப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது. அதன்படி, இந்திய அணி தனது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொள்ளும் நோக்கத்துடன் களமிறங்கும். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பல கேப்டன்கள் உலகக் கோப்பை கோப்பையை வென்றிருந்தாலும், டி20 உலகக் கோப்பையில் மிகவும் வெற்றிக்கரமான கேப்டன் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் 5 நாட்கள்.. பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்திய அணி!
எம்.எஸ்.தோனி:
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் எம்எஸ் தோனி. 2007 ஆம் ஆண்டு, தோனியின் தலைமையில், இந்திய அணி டி20 உலகக் கோப்பை பட்டத்தை கைப்பற்றியது. 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ரோஹித் சர்மா:
இந்திய அணி இதுவரை இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. தோனிக்குப் பிறகு, 2024ம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
டேரன் சமி:
இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் டேரன் சமி. சமியின் தலைமையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2012 மற்றும் பின்னர் 2016ம் ஆண்டுகளில் பட்டத்தை வென்றது. கடைசியாக 2016ம் ஆண்டு இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெற்றது, அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
2009ம் ஆண்டு இரண்டாவது டி20 உலகக் கோப்பை நடைபெற்றது. இதில், யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது. 2010ம் ஆண்டு பால் கோலிங்வுட் தலைமையில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக் கோப்பை பட்டத்தை கைப்பற்றியது. 2014 ஆம் ஆண்டு லசித் மலிங்காவின் தலைமையில் இலங்கை நான்காவது டி20 உலகக் கோப்பையை வென்றது. 2021ம் ஆண்டு ஆரோன் பிஞ்சின் தலைமையில் ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையை வென்றது. 2022ம் ஆண்டு ஜோஸ் பட்லரின் தலைமையிலான இங்கிலாந்து அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இந்தியா ஆகிய 3 அணிகள் மட்டுமே டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ALSO READ: விரைவில் டி20 உலகக் கோப்பை.. பரபரப்பை உச்சத்திற்கு கொண்டு போகும் 5 முக்கிய போட்டிகள்!
ஆண்டு வாரியாக டி20 உலகக் கோப்பை வென்ற அணிகள்: [2007-2024]
| ஆண்டு | வெற்றியாளர் | இரண்டாம் இடம் |
| 2007 | இந்தியா | பாகிஸ்தான் |
| 2009 | பாகிஸ்தான் | இலங்கை |
| 2010 | இங்கிலாந்து | ஆஸ்திரேலியா |
| 2012 | வெஸ்ட் இண்டீஸ் | இலங்கை |
| 2014 | இலங்கை | இந்தியா |
| 2016 | வெஸ்ட் இண்டீஸ் | இங்கிலாந்து |
| 2021 | ஆஸ்திரேலியா | நியூசிலாந்து |
| 2022 | இங்கிலாந்து | பாகிஸ்தான் |
| 2024 | இந்தியா | தென்னாப்பிரிக்கா |