மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மோகன்லால், தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். அந்த வரிசையில், அவரது 367வது திரைப்படம், தற்காலிகமாக L367 என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேப்பாடியன் புகழ் இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை, ஸ்ரீ கோகுலம் மூவீஸ் நிறுவனத்தின் கீழ் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். குடியரசு தினம் 2026 அன்று, இந்தப் படத்தை மோகன்லால் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.